இயற்கை உணவின் வழி — பசி தணிப்பதற்கல்ல, பரம்பொருள் உணர்வதற்காக

 

சித்திரா பௌர்ணமியின் இயற்கை ஆனந்தம்

சித்திரை பௌர்ணமி நாளில், சுரண்டை நகரம் ஒரு தெய்வீக ஆனந்தத்தில் மூழ்கியிருக்கும் . அந்த அரிய தினத்தில், சுரண்டை ஸ்வாமிகள் தங்கள் பிள்ளையார் கோயிலில் சித்திர குப்த நாயனார் வழிபாடு என்ற அதிஉயர்ந்த வழிபாட்டை நடத்தினர்  .
வழிபாடு   , சித்திர குப்தனுக்காக மட்டும் அல்ல; அனைத்து உயிர்களின் நற்பாபங்கள் கருணையின் ஒளியில் உருகி தூய்மையடையும் ஒரு ஆன்மிகப் பாதையாகவும் திகழ்ந்தது.


அந்த புனித வழிபாட்டில், சந்தையில் வாங்கப்படாத இயற்கையில் விளைவிக்கப்பட்ட  பழங்களும் காய்கறிகளும் மட்டும் நைவேத்யமாக அர்ப்பணிக்கப்படும். அவை கையில் பட்டு, சூரியனும் நிலவும் வளர்த்த புனிதமான இயற்கை நயமிக்கவை.

பழங்கள், காய்கள், முந்திரி வகைகள் — இவை அனைத்தும் மரபில் வழக்கமான நைவேத்தியங்களல்ல. ஆனால் சுரண்டை சுவாமிகள் அவற்றை இயற்கையின் அர்ச்சனை மலர்களாக கருதினார். 

அந்த நாளில், பக்தி, சேவை  , பாட்டு மற்றும் மந்திரங்களின் சங்கமமாகி, தியானிக்கும் உள்ளங்களை ஒன்றிணைத்து, இயற்கையின் பரம்பொருளை உணர்ந்த பக்தி முழக்கத்தில்

“ஓம் கண கணபதே நமோ நம” என்று கணபதிக்கு அர்ப்பணித்த பஜனைகள் .

"ஓம் நமசிவாய, சிவாய நம ஓம்" எனும் சிவபஜனை வானில் ஒலித்தது.

“சத்குருநாதா சரணம் சரணம்” எனும் குரு மந்திரம் இரவில் சிறப்புற அருள் தந்தது.

இந்த புனித சமயத்தில் சிவா சுவாமிகள் பக்தியுடனும் சேவையுடனும் கலந்து கொள்வார் . இயற்கை பழங்களை அன்பும் ஆராதனையுமாக சுத்திகரித்து அர்பணிப்பார் . அவர் சொல்வார் :

“இவை பழம் அல்ல, சிவானந்தத்தின் நவபுஷ்பங்கள்… இதை அர்ப்பணிப்பது, பரம்பொருளுக்கு உள்ளத்தைத் திறப்பது. உணவின் மூலத்தில் உண்மை இருக்கிறது. பழத்தில் பரஞ்சோதி இருக்கிறது. அதை பகிரும் கை புண்ணியம் பெறும்.”

பூஜை முடிந்து, அந்த இயற்கை பழங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு சிவா சுவாமிகள் ஒவ்வோர் பழத்துடனும் ஆனந்த அனுபவத்தை பகிர்ந்தார்; அந்தச் சாறு பசியை மட்டும் தீர்க்கவில்லை, பக்தர்களின் மனதுக்கு அமைதியையும் ஆன்மிகத்தையும்  தந்தது  .

திருவாசகத்தின் "அமுதே போற்றி" என்பது போல, இறைவனின் அருளிய அமுதம் அந்த பகிர்வின் மையமாக அமைந்தது.

இவ்வழிபாடில் இயற்கை உணர்வும், பக்தியும், சேவையும், பஜனைகள், மந்திரங்கள் என அனைத்து எளிய மக்களுக்கும் ஆன்மீகம் சேரும்படி செய்வார்.


Source : 

Comments