சிவா கண்ட வள்ளலார் காட்சி

 சிவா ஆரம்ப காலங்களில் ஒற்றை தூண் ஆதி விநாயகர் அருகில் உள்ள  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கைங்கையம் செய்துவந்தார் , அதிக நேரம் சிவகாமி அம்மன் சன்னதியில் ஶ்ரீ சக்கரத்திற்கு நேராக தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு காலை பொழுதில் சிவகாமி அம்மன் கோயிலில் தியானம் முடித்து நடராஜர் சன்னதிக்கு செல்வதற்காக சிவகங்கை தாண்டி ஒற்றை தூண் விநாயகரிடம் வந்தவர் ஓர் அனந்த காட்சியில் திலைதார் பிரகாசமான உருவம் தூய வெள்ளை வாஸ்திரம் , தலையில் முக்காடு என அவரை தனக்குள் ஈர்க்கும் அற்புத உருவத்தில் வள்ளலார் காட்சி கிடைக்க அங்கேயே சில மணி நேரங்கள் அனந்த களிப்பில் திளைதார் சிவா. 


இந்த அனுபவத்தை சிவா பகிரும் போது அவர் ஓர் பேரானந்த நிலையில் திளைத்து அனந்த கண்ணீர் சொரிய அவருக்கே உரித்தான முறையில் இதை விவரிக்க நாம் பெற்ற இன்பம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

Comments