சிவா அனுபவித்த அனுஷ்டான முறைகள்

 சிவா அனுபவித்த அனுஷ்டான முறைகள் 


சிவா தான் அடைந்த வாசியோகத்தை இடைவிடாது அனுஷ்டித்து வந்தார். மேலும் ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் கடினமான  நைஷ்டிக மௌனத்தில் இருப்பார். தான் ஒரு சிலேட்டில் வாசகம் எழுதி மிக முக்கியமான நேரங்களில் மட்டும் அதில் எழுதி கழுத்தில்தொங்க விட்டவாறு இருப்பார். சஷ்டி முடியும் வரை எவ்வித ஆகார சிந்தனையும் இல்லாமல் மௌனத்திலேயே இருப்பர்.

அவருடைய நித்ய அனுஷ்டானங்கள் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் இருக்கும். தனக்கு கிடைத்த மலர் கிடைத்த உணவு என தன்னிடம் உள்ளதை இறைவனுக்கு அர்ப்பணித்து பின் அங்கு இருக்கும் அணைத்து
ஜீவராசிகளுக்கும் பங்கிட்டு பின்னரே உண்பார். தினமும் சிவாவிடம் உணவு வாங்குவதற்காக அங்கு அணில் , காகம் , குருவி மற்றும் நாய் போன்ற ஜீவராசிகள் வருவது வழக்கம்.தனது ஒய்வு நேரங்களில் திருமந்திரம், திருவட்டப்பா போன்றவற்றை படிப்பார் , அங்கு வரும் தமிழ் ஆசிரியர் ஐயாவிடம் கூறி படிக்கச்சொல்லியும் கேட்பார்.தினமும் மாலை விற்காமல் போன மலர் சரங்கள் சிவாவிடம் வரும் அவை சில காய்ந்துபோய் இருக்கும் அவற்றில் நல்ல பகுதியை மட்டும் எடுத்து தன் கூரை இடத்தில உள்ள படங்களுக்கு அணிவிப்பர். ஒருசில நாள் அதிக பூக்கள் வந்தால் வருத்தம் அடைவார் இவ்வளவு பூ வியாபாரம் ஆகாமல் போயிற்றே அந்த பூக்கார அம்மா படும் வேதனையை தான் பட்டு அனுபவிப்பார். 

அதிகாலையில் எழுந்து தெற்கு சன்னதி அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் குளித்து நெற்றிநிறைய திருநீறு அணிந்து சிவமே உருவமாக ஆனந்த புன்னகையுடன் நந்தவனத்தில் மலர்களை பறிப்பார். அவருக்காக செடிகள் வளைந்து பூக்களை கொடுக்கும் அழகு அற்புதமானது. பின்பு தனது ஆத்ம அனுபவத்தில் சிறிது நேரம் திளைத்து தனது கைகளை தலைமேல் உயர்த்தி ஆனந்தத்தில் இருப்பார். பின்னர் நீர் எடுத்துவைப்பது நீர்மோர் கரைப்பது என தனது தொண்டில் இருப்பார். இதை தனது வழக்கமாக செய்துவந்தார்.

சிவாவிற்கு சில்லறை காசுகள் விருப்பமாக எடுத்துக்கொள்வார் , அவர் சுற்றி வரும் போது சன்னதியில் உள்ள ஐயாவிடம் அச்சிலரைகளை தட்டில் போட்டு விபூதி வாங்கிக்கொள்வார். அவர்களும் அக்காசை பக்தியுடன் எடுத்து தனியாக வைத்துக்கொள்வார்கள் .


அவரை எளிமையின் மருவருவமாகவே அனைவரும் கண்டனர் 

Comments