TO :SURABHI GOHSHALA
TO :SURABHI GOHSHALA
, Srinagaram, South Ammapet, Salem-636014. Tamilnadu mobile:
9443229061
குருவே துணை
சாற்றியதோ ருபதேசம் நன்றாய்கேளு
சங்கையுடன் ரூம் றீம் சிம்ராவென்று
தேற்றியதோர் சித்தர்சிவ யோகிதானும்
திருநீறு தானெடுத்துக் கொடுக்கும் போது
பார்த்திபனே மந்திரத்தை நினைத்து வாங்க
பதிலாக அவர்பிலமும் வருகும்பாரே.
-அகத்தியர்
விபூதி (திருநீறு)
பூதி - என்ற சொல் தமிழில் பொக்கிஷம் (அ) பொன் என்றும் , சமஸ்கிருதம் பூதி என்ற சொல்லை ஐஸ்வர்யம் என்று கூறுகின்றது . மற்றொரு பொருளில் விபு என்ற சொல் நித்தியமானது
என்றும் கடவுளின் உச்ச சக்தி என்றும்
கொண்டாடப்படுகின்றது.
இவ்வாறான மிகவும் உயர்ந்த திருநீற்றை சுரபி கோசாலையில் முறையாக ,சிரத்தையுடன் தயாரித்து கிடைக்கப்பெற்ற திருநீறு இங்கு தை அமாவாசை (9-Feb-2024) ஸ்ரீ ல ஸ்ரீ சிவா சுவாமிகள் குருபூஜை அபிஷேகத்தில் அர்பணிக்கப்பட்டது. அவ் திருநீற்றின் தூய்மை அபிஷேக அர்பணிப்பின் போது அனைவரும் உணர்ந்து இன்புற்றனர் என்பதை தங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
இத்துடன் குருபூஜை அபிஷேகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட திருநீறு சிவா ஸ்வாமிகள் அருட் பிரசாதமாக அனுப்பபட்டுள்ளது.
அன்புடன்
சிவா சுவாமிகள் அன்பர்கள்
TO : Jayanth Agro Farms
TO : Jayanth Agro Farms, 22w/4,Kamarajar, Kulalarpalayam,Bodinayakanur-625513.
குருவே துணை!
கறந்தபால்
கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார்
சிந்தனையுள் தேனூறி நின்று
- மாணிக்கவாசகர்
கறந்த பால் , கன்னல் - கரும்பின் சாறு
அதனுடன் சேர்த்த நெய் …
இவை அனைத்தும் சேர்த்தால் எவ்வளவு திதிக்குமோ அதுபோல சிறந்தடியார் சிதனையுள் தேனூறி - தேனில் ஊறிய பொருள் எவ்வாறு கெடாதோ அதுபோல சித்தனையுள் சிவம் என்ற தேன் ஊறியவர்களும் கெடுவதில்லை. இதில் கவனிக்க வேண்டிய சிறப்பு என்னவென்றால் தேனும் சிவனும் ஒன்று என்று ஒப்புமை கூறுகின்றார் மாணிக்கவாசகர். தேனு என்பது சிவனின் பெயராகவே உள்ளது. கெடுவது என்றால் மாற்றம் என்று பொருள்படும் (மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்) இவ்வாறு மாற்றமில்லாத தன்னமையாகிய பிறவா நிலையை தரும் அற்புத தேன் அபிஷேகம் மற்றும்
தூய பசு நெய் ஒவ்வொரு வருட சிவா குருபூஜையின் போதும் ஜெயந்த் அஃரோ பார்ம்ஸ்
ஆல் கிடைக்கப்பெற்றும் , இம்முறையும் தை அமாவாசை (9-Feb-2024) ஸ்ரீ ல ஸ்ரீ சிவா சுவாமிகள்
குருபூஜை அபிஷேகத்தில் அர்பணிக்கப்பட்டது. அவ் தேன் மற்றும் பசு நெய் தூய்மை அபிஷேக அர்பணிப்பின் போது அனைவரும்
உணர்ந்து இன்புற்றனர் என்பதை தங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
மேலும் தங்களது தூய இறைப்பணி மென்மேலும் சிறக்க ஸ்ரீ சிவா ஸ்வாமிகள்
அன்பும் ஆசிகளும் கிடைக்கப்பெற வேண்டுகிறோம்.
இத்துடன் குருபூஜை அபிஷேகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட திருநீறு சிவா ஸ்வாமிகள் அருட்
பிரசாதமாக அனுப்பபட்டுள்ளது.
அன்புடன்
சிவா சுவாமிகள் அன்பர்கள்


Comments