வள்ளலார் அருளிய பஞ்ச கற்பம்

சிவா இயற்க்கை விவசாயம் நிலைப்பாட்டின் வாயிலாக நமக்கு இயற்கையின் மீதான ஈடுபடும் புரிதலும் தொடர் புரிதலாக நமக்கு சிவா வழங்கிவருவதை மறுக்க இயலாது.


சிவா இயற்கையின் துளிர் ,வியோமம் செயல்பாடு நம்மை தன்னார்வத்துடன் ஈடுபடுத்தி வருகின்றது 



இதன் தொடர்ச்சியாக , வள்ளலார் சிந்தனையின் சுத்த விவசாயம் சார்ந்த புரிதலும் அதன் பாகங்களும் தெளிவு பெற்றன. சிவா இயற்க்கை அடிப்படை கோட்பாடுகளும் இதை கருத்தில்கொண்டு செயல்முறை படுத்துகின்றது 



இதன் முதல் படியாக சுத்த உணவும் , சுத்த நித்ய கரும முறைகளும் சிந்திக்க பட்டன 

சித்தர் முறை உப்பு கட்டுதலும் , ஆரோக்கியத்திற்க்கான சுத்த குளியல் பொடியும் (பஞ்ச கற்பம் ) செய்முறை பயிற்சி செயல் படுத்தப்பட்டது 

பஞ்ச கற்பம் 

  1. கஸ்தூரி மஞ்சள்  - 200
  2. வேப்பம் பருப்பு - 200
  3. வெள்ளை மிளகு -200
  4. கடுக்காய்த் தோல் -200
  5. நெல்லிவற்றல் -200

இவைகளை தனித்தனியே சுத்தம் செய்து அரைத்துப் வைத்துக்கொள்ள வேண்டும் 

வாரத்திற்கு ஒரு முறை (அ) மதத்திற்கு இரண்டு முறை என இரண்டு ஸ்பூன் அளவு பசும்பாலில் மிதமான சூடு காட்டி பின்பு நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் குளிக்கவும் .

திருமூலர் கருக்கிடை வைத்தியம் -600 என்ற நூலில் இவ் பஞ்ச கற்பம் முறையும் இதன் பயன்களும் தெளிவு படுத்தபட்டுள்ளது 


அழகு நுதலி அதிசயமே கேளாய்
களவு காயங் கலந்த அந்தீரிலே 
மிளகு மஞ்சள் கடுநெல்லி வேம்பிடில்
இளகுங் காயம் இறுகுங் கபாலமே. (162)

கடுக்காய் பருப்பு, மிளகு, மஞ்சள், நெல்லிமுள்ளி, வேப்பங்கொட்டை போன்றவைகளை பாலில் அரைத்து தலை முழுகினால் தேகம் திடப்படுவதோடு கபாலமும் இறுகும்

கபாலம் இறுகும் கண்ணும் துலக்கமாம்
அபால மிந்தனி அதிவண்டு போலாகும் 
விபாலத் திசைவாய்வு வேதனை செய்யாது
இபாலத் தினுள்ளே எளிதாக மத்தியே. (163)

கபாலம் இருகுவது மட்டுமின்றி கண்கள் பிரகாசமாகும். தலை முடியானது வண்டு போல் கறுப்பாயிருக்கும். தசவாயுக்கள் உடலை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாது.

Comments