சித்தர் முறை உப்பு கட்டு தெளிவு பார்வை

சித்தர் முறை உப்பு கட்டு

தெளிவு பார்வை 

சித்தர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் புளியினால் ஏற்படும் விளைவை அறிந்து அவற்றை கர்ப்பமாக மாற்றம் செய்து பயன்படுத்தினர். இதை அறியாமல் நாம் "உப்பால் நரை  புளியால் திரை " கூற்றுக்கு இணங்க அவற்றை அதிகம் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தி துன்பத்திற்கு விழைகின்றோம்.

இதில் சித்தர்கள் கல்லுப்பபை பயன்படுத்தும் முறையும் அதை வள்ளலார் வழி எளிமை படுத்துதலும் அமைந்துள்ளது 

மச்சமுனிநாயனார் திருமந்திரம் 800


சுன்னமாயக் கல்லுப்பைச் சொல்லுவேன் மக்கள் 
தின்னமாஞ் தடலுரு சேர்வெடி சாரமும் 
வன்னமாம் பச்சை வளர்வீரம் தன்னொடு 
சொன்ன கல்லுப்புடன் தோன்ற எடுத்திடே. 42

எடுத்திட் டரைத்திடு ஏகமாம் நீரதில் 
தொடுத்திடு வில்லையைச் சுருள ரவியிடு 
படுத்திடு ஓட்டில் பதிய மண்சீலைசெய் 
கொடுத்திடுபுடத்தில் கொடுஞ் சன்னமாகுமே.

ஆகும் கல்சுன்ன மாரு மறிந்திலர் 
வாகுடன் பேசி வகையிடு மாந்தரைப் 
பாகுடன் கூடிப் பயின்று திரியாதே
ஆகம நூலை யறிந்து பிழைத்திடே.  106

பிழைத்திட வேண்டிப் பேசினேன் மக்களே 
நிலைத்திடுங் காரம் நேர்மையின் சுன்னத்தை 
தழைத்திடக் கேளு தன்னொடு வீரம் 
மலைத்திடும் வெடியும் ஆனதோர் பச்சையே 

பச்சைச் சரியிடைப் பகுந்த வெண்ணீறிதில்
இச்சையா யாட்டி யெடுத்திடு வில்லைபோற் 
வச்சிடு வோட்டில் வளம்பெறச் சீலைசெய்
நிச்சயமாக நிறுத்துப் புடமிடே.

புடமிதில் காரம் பொருந்திக் கழித்திட 
அடைவுடன் சுன்ன மாரு மறிந்திலார் 
திடமான லோகம் க்ஷணத்தி லுருகிடும் 
விடமான காரம் வெண்சுன்ன மார்க்கமே

  திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600  


கல்லுப்பு என்று கூறியவுடன் என்னமோ ஏதோ, என்று மலைக்காதே. இதுவே கடற்பத்தினின் நாதமாகும். அதாவது கடலினுள் உப்பானது கரையாமல் கட்டிகளாய் நிற்கும். இந்த கல்லுப்பால் வாதம் என்ற வார்த்தையே வளர்ந்தது

வளர்ந்திடும் உப்பை வளமாகக் கட்டிட 
உளந்து திரிந்தாலும் ஒருவாகக் கட்டாது 
வறிந்து இதைக்கட்ட வறிந்தோர்க்கு எல்லாஞ்சாம் 
துலைந்திடா மாத்திரை சொர்னக் குருவாமே (418)

கல்லுப்பைக் கட்டுவதென்பது மிகவும் கடினமாகும். இதை கட்டுவதற்கு மூலிகை தேடி காடு மலை சென்றாலும் பலிதமாகாது முறையாக எவர் இக்கல்லுப்பை கட்டுகிறார்களோ அவர்களுக்கே எல்லா சரக்குகளையும் மடியச் செய்து குரு மருந்தாக மாற்றும் தன்மையும் தங்கமும் சித்தியாகும்

கல்லுப்புக் கட்டு

ஒக்குமே வாதம் முகம்பார்த்து சித்திக்கும் 
தக்குமோ தேகம் சதாகோடி காலமும்
உக்குமோ மேனி உறுவாம் பிறப்பது 
தொக்குமா வாதஞ்சொல் ஆதிக் கல்லுப்பே (416)

யோகம் பார்த்தவர்க்கு வாதமும் சதாகோடிகாலம் வாழும் தன்மையும் உண்டாகும். அதுமட்டுமின்றி மீண்டும் இப்பூமியில் பிறவாமல் போவான். வாதம் என்ற சொல்லுக்கு பிறப்பிடமே கல்லுப்புத்தான்

கல்லுப்போ வென்று கசடரே எண்ணாதே 
நல்லுற்ற வாரிதி நாயகி நாதங்காண் 
வெல்லுற்ற நீரில் உருப்பட்டு பாரைபோல் 
வல்லுற்ற உப்பால் வளர்ந்தது வாதமே.


அடே யப்பா !! இவ்வளவு கஷ்டமா என மலைக்க வேண்டாம் .. கருணையே வடிவான வள்ளல் பெருமானார் இதை நமக்கு மிகவும் எளிமை படுத்தி தந்துள்ளார் 


வள்ளலார் வழி எளிமை

வள்ளலார் உரைநடை பகுதியில் ( மருத்துவ குறிப்பு ) 3-4 முறைகள் குறிப்பாக கொடுக்க பட்டுள்ளது.

வள்ளலார் உபதேசக் குறிப்புகள்உப்பு

தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.

மூலிகை குண அட்டவணை: 

99. சுவர் முள்ளங்கி - நாக பற்பி, உப்புக் கட்டி

161. குளிரி - உப்புக்கட்டி

284. குப்பை மேனி - உப்புக்கட்டு

474. மஞ்சணாத்தி - உப்புக் கட்டி


செய்முறை 

பெரிய அகண்ட இரும்பு (அ) மண் சட்டி 

தேவையான கல்லுப்பு 

கல்லுப்பு அளவில் பாதி அளவு குப்பைமேனி (அ ) முருங்கை இலை 

இவற்றை நன்கு வறுக்கவேண்டும் (நன்கு வெடித்து ) உப்பில் உள்ள பிசிப்பு தண்மை போகும் அளவு 

பின்பு இவற்றை நன்கு சுத்தம் செய்து கண்ணாடி (அ ) பீங்கான் பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தவேண்டும் 

இதை நாம் நடைமுறை படுத்தி இன்புற்று வாழ்வோமாக 




எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


Comments

varunsivapithan said…
தெளிவான விளக்கம் சுவாமி 🙏🏻
varunsivapithan said…
அருமை சுவாமி 🙏🏻
Emptiness said…
Unknown தங்கள் அன்பிற்கு நன்றி !! 🙏🏻