பூரணத்தில் இருந்தது பூர்ணம்

பூரணத்தில் இருந்தது பூரணத்தை நீக்கிய பின்பும் எஞ்சி இருப்பது பூரணமே..என்று அச்சர்யமூடும் ஈசா வாஸ்ய உபநிடதம் (Isha Upanishad) மந்திரம்

Banach–Tarski paradox

பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி ||

  • அத - இறைவன்
  • பூர்ணம் - முழுமையானவர்
  • பூர்ணமத- இறைவன் முழுமையானவர்
  • இதம் - இந்த உலகம் 
இதில் அகரம் வெளிப்படில் அதில் இகரம் சேர்ந்தே இருக்கும் அவ்வாறே மாற்றி வரினும் என்பது வள்ளலின் கூற்று அஃதாவது எங்கு இறை ( அத ) இருக்கின்றதோ அங்கு உலகம் (அ) ஆன்மாக்கள் இருக்கும் (இத) என்பதை கவனிக்கவேண்டும் இவை சமஸ்க்ரித ஒலிகள் என்றாலும் அவை அடிப்படை தமிழின் அமைப்போடு இசைத்து உள்ளன  
  • பூர்ணமிதம் - இந்த உலகம் முழுமையானது (அ) ஆன்மாக்கள்.
  • ஆத் - இறைவனிலிருந்தே
  • பூர்ணாத் - முழுமையான இறைவனிலிருந்தே
  • உதச்யதே - தோன்றியுள்ளது
  • பூர்ணமுதச்யதே - முழுமையான இறைவனிலிருந்து தோன்றியுள்ளது
  • பூர்ணஸ்ய -முழுமையிலிருந்து
  • ஆதாய - எடுத்த பின்பும் ( ஆதாயம் என்று தமிழ் வழக்கில் நாம் கூறுவது எடுப்பது என்ற அடிப்படை தான் )
  • பூர்ணமாதாய - முழுமையை எடுத்த பின்பும்
  • பூர்ணம் ஏவ - முழுமையே
  • அவசிஷ்யதே - எஞ்சியுள்ளது
  • பூர்ணமேவாசிஷ்யதே- முழுமையே எஞ்சியுள்ளது

இதில் என்ன அப்படி ஆச்சர்யம் ?

 இதோ 19அம் நூற்றாண்டில் வெளிவந்த ஓர்  கணித தத்துவம் "பனாக்-டார்ஸ்கி முரண்பாடு " என்ன கூறுகிறது என்றால்

Banach–Tarski paradoxபனச்-டார்ஸ்கி முரண்பாடு (தேற்றம்) அல்லது பந்து இரட்டிப்பாக்க முரண்பாடு  - ஒரு முப்பரிமாண பந்தில் இருந்து ஒரு சில முறையில் பகுதிகளை பிரித்து மீண்டும் அவற்றை தனியாக சேர்க்க அது மற்றும் ஓர் முழு வடிவ முப்பரிமாண பந்து பெரும் (இரட்டிப்பாக்க) 

இச் செயல்பாட்டை கணித வடிவில் நிரூபித்து காட்டுகின்றது இத் தேற்றம்

இதில் அந்த முப்பரிமாண பந்தின் ஒருசில பகுதிகளை மட்டும் பிரித்து மீண்டும் கூட்ட அது இரட்டிப்பு வடிவம் எடுக்கின்றது என்று பார்த்தோம். அதையே உபநிஷதம் இன்னும் ஆழமாக விளக்குகின்றது.

எது பூரண தன்மையில் உள்ளதோ அதாவது முழுமை அடைந்து உள்ளதோ அதில் இருந்து பூரணத்தை (அ) முழுமையை பிரித்த போதும் எஞ்சி இருப்பது பூரணமே.

இந்த பூரணம் என்ற ஸ்லோகத்தை எங்களுடன் பயணித்த அன்பர் எங்களுக்கு கைலாய பரிக்ரமா செல்லும்பொது அவர் நெகிழ்ச்சியுடன் கூறியது என் நினைவில் இன்றும் இருக்கின்றது. ஆம் கயிலாயம் உண்மையில் ஓர் ஞான பொக்கிஷ பூரணமே அதில் இருந்து நாம் எவ்வளவு ஞானத்தை பெற்று எடுத்த போதிலும் எஞ்சி இருப்பது அழியாத பூரணமே. 

இப்பொழுது எனது ஆச்சர்யத்தின் காரணம் புரிந்துஇருக்கும் என உணர்கிறேன்


Comments