நான் கண்ட பூச்சி


விவசாயிகளுக்கு மிகுந்த குடைச்சலை தருபவை என்று பெருவாரியாக நம்பப்படும் நண்பர் தான் இவ் பூச்சிகள். யான் இவ் இயற்க்கை விவசாயம் பற்றிய தேடலில் இவற்றை பற்றி புரிந்துகொள்ள முயற்சித்தேன் ஆனால் அவ் முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை என்பதை உணர்ந்தேன்.
அழியும் பூச்சிகள் 
உலகெங்கும் அனைத்து பகுதிகளிலும் 40 சதவீத பூச்சிகள் அழியும் தருவாயில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பூச்சியியல் என்ற ஒரு தனி பிரிவு மேல்நிலை கல்வி இருக்கின்றது , பூச்சியியல் 18ஆம் நூற்றாண்டில் பூச்சியியல் தந்தை வில்லியம் கிர்பி ( William Kirby)  துவக்குகிறார் ஆனால் , பல நூற்றாண்டுகளுக்கும் முன்னரே இதை தொல்காப்பியர் எளிமையாக வகைப்படுத்துகின்றார். இதில் வருத்தம் என்னவென்றால் பூச்சியியல் வல்லுநர்கள் ஒருபோது பூச்சிகளை பாதுக்காக்க படிப்பதில்லை மாறாக அவர்களுக்கு நல்ல பூச்சியியல் வல்லுநர் என்ற (Associate Certified Entomologist (ACE)) பட்டம் வழங்குவதே அவர்கள் பூச்சி கட்டுப்பாடு மற்றும் அவற்றை அழிக்கும் மருந்துகள் தயாரிக்க என்று ஆகிவிட்டது.
பெருவாரியாக பூச்சிகள் என்றவுடன் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் என்று பிரித்து அவற்றின் வகைகள், வடிவங்கள், செயல்பாடுகள் என்று இது விரிந்துகொண்டே செல்லும் ஓர் பெரிய உலகம்.அவற்றின் வகைகள் நன்மை தீமை என்பவற்றை தாண்டி நம்மை சிந்திக்க வைக்க நமக்கு குறைந்தபட்ச ஜீவகாருண்யம் தேவைப்படுகின்றது. 
அவைகளை இவ்வாறு எந்தவித வகைப்படுத்தல் இல்லாமல் அவற்றை நாம் ஓர் உயிர்தன்மை என்று உணர நமக்கு மிகுந்த வெளிச்சமும் இறை மீதின் ஆழ்த்த புரிதலும் தேவைப்படுகின்றது.

தொல்காப்பியர் 
புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே 
நத்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே 
சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே 
நண்டும தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே 
மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே 
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே தொல் -பொரு சூத் 577
ஓரறிவு உயிரினங்களை
புறக் காழனவே புல் என மொழிப. 86
அகக் காழனவே மரம் என மொழிப. 87
ஓரறிவு உயிரினங்களை  புறக்காழ் , அகக்காழ்  என்று பகுப்பிட்டு ; அதாவது ஓர் இலை விதை தாவரங்கள் புறக்காழ் வகையை சேர்த்து என்றும், இருவிதை இலை தாவரங்கள் கிளைக்கும் தன்மை பெற்றவை என்றும் அவை அகக்காழ் என்றும் பிரித்து விளக்குகின்றார்  ( காழ் - மரவயிரம்  , அதாவது, வெட்டப்பட்ட தென்னை மரம் அல்லது பனை மரத்தின்  உள்ளே சொதியாகவும் , வெளியே வைரம் ( காழ்) பாய்ந்தும் இருக்கும்.  இது புறக்காழ். ) 
இவ்வாறு ஓரறிவு உயிரினங்களை விளக்கமாக கூறும் தொல்காப்பியம் மூன்றறிவு உள்ள பூச்சி இனங்களை நாம் இப்பொழுது பார்ப்பதுபோல நன்மை செய்யும் பூச்சி தீமை செய்யும் பூச்சிகள் என்று ஒருபோதும் வகைப்படுத்தவில்லை. 
மேலும் பூச்சிகள் என்பது பண்டைய காலம்முதல் இருந்துவரும் ஒரு உயிரினம் என்பதும் தொல்காப்பியம் நமக்கு காண்பிக்கின்றது.

சரி இப்பொழு நம்முடைய அனுபவத்திற்கு வருவோம்., நமக்கு சிவா இயற்க்கை விவசாயம் மூலமாக அடிப்படை 5 கோட்பாடுகளை சிவா வகுத்து தருகின்றார். 

சிவா இயற்க்கை விவசாய வாழ்வியல் கலை அடிப்படை கோட்பாடுகள் 
  1. அன்பு பாராட்டல் 
  2. குடும்பமாக பாவித்தல் 
  3. எதிர்பார்ப்பு இல்லாதிருத்தல் 
  4. வாழ்வியல் (அ ) கலாச்சாரமாக ஒத்து இசைதல் 
  5. இவ் நான்கினை ஒத்த நுட்பம் இசைதல் 

இதில் முதல் மூன்றும் மிகவும் சிக்கலான கோட்பாடுகள் அதாவது இதில் நாம் நம் புரிதல் தெளிவாக இல்லை எனில் இதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம், மேலும் எதிர்பார்ப்பு இல்லாத விவசாயம் எதோ தத்துவத்திற்கு வேண்டுமானால் ஒத்துவரலாம் ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமா ? என்று அஞ்ஞான மனம் நம்மை திசை திருப்பி புலம்பத்தான் செய்யும். இதையும் கடந்து இது சிவாவின் கட்டளை எண்ணானாலும் இக் கட்டளைகளை இருப்பது போல் நேர்மையுடன் அணுக உண்மையான அன்பும் குரு பக்தியும் அவசியம்.

இந்த முயற்சியை நாம் இங்கு சிறு வடிவில் இருக்கும் இடத்திற்கு ஏற்றால் போல் வடிவமைத்து முயற்சிக்க தொடங்கினோம். இதில் கேரட் விதைகள் முளைக்கும் போதே அதனுடன் செழிப்பாக களைச்செடிகளும் வளர தொடங்கின. ஆரம்பத்தில் களைய்களை பிடுங்க முற்பட்டபோது அவற்றின் பசுமை நம்மை தடுத்தது. எனவே எண்ணானாலும் எந்த வித மாற்றமோ அல்லது சிதைவோ ஏற்படுத்துவதில்லை என முடிவு எடுத்தேன். நாட்கள் ஓடின அவற்றின் அருகே ஓர் தக்காளி செடியும் எந்தவித முயற்சியும் இல்லாமல் வளர்ந்தது. 

கண்முன்னே விளக்கம் 
சிறிது நாட்களில் அங்கு செடிகளின் இலைகளின் மீது பூச்சி இருப்பதை பார்த்தேன் அனால் அவற்றுக்கும் எந்த வித விரட்டும் பயன்படுத்தவில்லை மாறாக என்மனம் அவையும் நம் தோட்ட உறுப்பினர் என்ற எண்ணம் விளைந்தது ஆகவே அவற்றிக்கும் உணவாக காய்கறி மிச்சங்களை சேடிகளுக்கு அருகில் வைத்தேன். 

பூச்சிகளின் நேர்மை 
                    பூச்சிகள் அங்கு இருந்த களை செடிகளை அதிகம் சாப்பிட்டு இருந்தன ஆனால் அதன் அருகிலேயே இருக்கும் தக்காளி செடிக்கோ அல்லது கேரட் செடிகளுக்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதது அவற்றின் நேர்மையும் முதிர்ச்சியையும் உணரச்செய்தது 


                        இதில் அவற்றையும் உயிராக பாவித்து இந்தவுலகில் நாம் இருப்பதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு அவற்றிக்கு இருக்கின்றது என்பதை புரிந்து நடக்கவேண்டும். இது ஒரு புரிதல் மட்டுமே , நாம் எதோ 4x4 இடத்தில செய்து இதுபோலத்தான் விவசாயம் செய்யவேண்டும் என்று இங்கு கூறவில்லை, ஆனால் நாம் அணைத்து உயிர்களையும் சமமாக பார்க்கும் பொது அதில் பெரும் ஆனந்தமும் இறைஅனுபவமும் அளவில் அடங்கா. அதேசமயம் நம்மில் சரிபாதி அறிவுடைய உயிர்கள் அவைகள் ஆகவே அவற்றை நாம் உயிர்களாக பார்த்து அவற்றுக்கும் உண்டான இந்த இயற்க்கையின் உரிமையை ஒருபோது பறிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. இறைவன் இயற்க்கை உண்மை என்று வள்ளல் பெருமான் கூறியதை உணர்வோமாக.



Comments