கேள்வி-இருள்
இப்ப நாம என்ன புரிஞ்சிக்கணும் அப்படின்னா, கேள்வி அப்படின்றது இருட்டு அல்லது இருள் , கேள்வியின் மூலமாக நாம ஒரு வாரியா கிடைக்கிற விளக்கம் என்பதை வைத்து அறிவை பெறுகின்றோம். இங்கு விளக்கம் அது வெளிச்சம் அறிவு என்பது ஒளி அல்லது சுடர்.
இந்த தொடர்ச்சியில நாம வெறுமனே கேள்வி மட்டுமே வைத்திருப்பவராக இருந்தோம் ஆனால் அது அடுத்த கேள்வியோட மட்டுமே நம்மை கொண்டு போய் சேர்க்கும் ,அப்படின்னா என்ன அர்த்தம் என்றால் இருளைக் கொண்டு இருளை மட்டும் தான் பெற முடியும் இருளைக் கொண்டு வெளிச்சத்தை பெறவே முடியாது இது அடிப்படையா நாம புரிஞ்சிக்கணும்.
தமிழ் அருமை
விளக்கம் = வெளிச்சம் | அறிவு = ஒளி | கேள்வி = இருள்
(ஒளி) சுடர் = ச்+ உடர் ; உடர் என்றால் உடல் "ச் " ஜீவன் என்று நாம் முன்பே பார்த்திருக்கிறோம் ஆகவே சுடர் என்றால் ஜீவனின் உடல் என்ற மூலப் பொருளை உணர்த்தும்.
விளக்கம் = வ்+ இளக்கம் என்றால் தளர்ச்சி அதாவது விரிந்து நிற்றல். எங்கு ஒளி விரிந்து செயல் படுகின்றதோ அது விளக்கம் என்றாயிற்று வி என்பது விகுதி.
எங்கு விளக்கம் செரிவு பெருகின்றதோ அது அறிவு என்றானது.
செறிவுஎனப் படுவது நெகிழிசை யின்மை - தண்டியலங்கார நூற்பா.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே - மாணிக்கவாசகர்
சுடர் உடனே நமக்கு விளக்கு ஞாபகத்திற்கு வரும் விளக்கு சுடரின் ஒரு உருவாக்கப் பொருள் விளக்கின் ஒளியே சுடர் அல்ல உண்மையான சுடர் எந்தவித இருள் சூழாத தன்மை. இதனாலே ஓசோ விளக்கின் கீழ் இருள் என்ற கருத்தை சொல்லுவார். இதை மேலும் விளக்கமாக வள்ளலார் கூறும்பொழுது.
ஜோதி ஜோதி ஜோதி சுயம் என்று விளக்குவார் சுயம் என்ற வார்த்தை அந்த ஜோதி எந்தவித உருவாக்கப் பொருளாலும் அகப்படாமல் தானாக இருப்பது அவ்வாறு தோன்றும் சுடர் எல்லா பக்கங்களும் நீக்கமற விளக்கத்தை காண்பிக்க வல்லது .
ஒலி ஒளி இதில் வரும் 2 லகர ளகர எழுத்துக்களும் இடையின எழுத்து வகையை சேர்ந்தது ஆகும் இதில் இலக்கண அமைப்பின் படி எப்பொழுது பதிமூன்றாவது மெய்யெழுத்து 17ஆவது மெய்யெழுத்தாக உருமாற்றம் பெரும் என்ற அறிவியலை நாம் அறிந்தால் இந்த ஒலியை ஒளியாக மாற்றும் வித்தையை ( quantum science)
அறிந்தவர்களாக ஆகின்றோம் இவை அனைத்துமே மிகவும் எளிமைப்படுத்தி நமக்கு தமிழில் அமைக்கப்பட்டுள்ளது இதனை உலகிற்கு மறைப்பு இல்லாமல் இலக்கணத்தின் குற்றங்களை நீக்கிஅவற்றை எவ்வாறு நாம் பார்க்க வேண்டும் என்பதையும் வள்ளல் பெருமான் உணர்த்தியுள்ளார் . (தொண்டமண்டல சதகம் -உணர்)
கேள்வி இத இன்னும் கொஞ்சம் ஆழமா பார்ப்போம் அதாவது கேள்வி தனியாவும் நாம தனியாவும் இருந்தோம்னா அந்தக் கேள்வி முனைப்பு இல்லாத கேள்வி அப்படின்னு வச்சுக்கணும். அந்த மாதிரியான கேள்விகளால் எந்த பயனும் கிடையாது . அது மேலும் மேலும் இருளில் தான் கொண்டு போய் சேர்க்கும்.
அப்படின்னா எப்படி கேள்வி கேட்கணும்?
ஞானிகள் நம்மள கேள்வி கேட்க சொல்றாங்க. உதாரணமா
நான் யார்?
இந்தக் கேள்வி ரமண மகானை மிகவும் எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டுபோய் சேர்த்தது, ஆனா அதே கேள்வி நம்மிடம் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வரல , இதுல நாம என்ன புரிஞ்சுக்கணும் அப்படின்னா எந்த ஒரு கேள்வியா இருந்தாலும் அந்தக் கேள்வியோட நாம இணைந்து இருக்கணும் அந்தக் கேள்வி நமக்குள் ஒரு தாக்கத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தாத வரைக்கும் அந்தக் கேள்வியால் நமக்கு பயனில்லை. இந்தக் கேள்வியோடு நாம இணைந்து இருக்கிறது அப்படின்னா அந்த கேள்விக்கான விளக்கத்தை தெரிஞ்சுக்கிறதுக்கு குண்டான முயற்சியில நம்முடைய பங்கு முழுமையா இருக்கணும்.
கேள்வி என்றது இருட்டு அப்படின்னா கேள்வி கேட்கிறது தப்பா ?
அப்படி அல்ல கேள்வி நமக்குள் எழுந்தவுடனே அதற்கு உண்டான விளக்கம் அறிவு ,வெளிச்சம் அங்கேயே தோன்றுது கேள்வி -விளக்கம் அல்லது இருள் வெளிச்சம் இரண்டும் வெவ்வேற அல்ல இரண்டும் ஒரே பொருள் ஆனா இருவேறு தன்மைகள்.
எப்ப நம்முடைய உயிர் கேள்வி அப்படின்ற இருட்ட நோக்கி பயணிக்கின்றது அப்பவே இறை அருள் அந்த உயிர இருட்டிலிருந்து காப்பாத்தரத்துக்கு விரைந்து செயல்படும் இந்த செயல் இறைவனுடைய இயல்பு அத இறை இந்த இருட்டிலிருந்து உயிர்களை காப்பாற்ற இறைவன் ஓடிவரும் அந்த செயலை பெருவாரியாக நம்மளால உணர முடியறது இல்ல ஏன் அப்படின்னா அந்த கேள்வியோட ஒன்னு நாம இருக்கறதில்லை இல்லேன்னா அந்த அந்த கேள்வி நாம நம்ம உயிரோட ஆழத்திற்கு கொண்டு இல்லை , பெருவாரியான கேள்விகள் நம்மகிட்ட தோன்றிய உடனே வெளிச்சம் அப்படின்ற விளக்கம் அதன் மேலே பட்டு கேள்விய காணாம பண்ணிடும்.
இதனாலேயே ஞானிகள் உயிர் ஆழம் உள்ள கேள்விகள உபதேசமா கொடுத்தார்கள். அப்படி உயிர் ஆழம் உள்ள உணர்வுபூர்வமான கேள்வி இருந்தா சுலபமா ஒரு உயிர் இறை அனுபவத்தை பெற்றிட முடியும் எப்ப உயிர் ஆழம் இருக்கிற கேள்வியோட நாம உணர்வோட ஒன்று இருக்கும் பொழுது இறை அங்க வந்து ஆட்கொண்டு அந்த விளக்குகிற நிகழ்வின்போது இந்த இறையும் ஒன்றென கலக்குற அந்த நிகழ்வும் நடக்கும் .
Comments