கண்ணாமூச்சி
என்றாய்
நீ மறைந்து என்னை பிடி என்றாய்
தோல்வியை ஒப்புக்கொண்டேன் , பின் நீ மறை என்றாய்
நானோ உன் சூது அறியாமல் உன் மாயையில் ஒளிந்தேன்
உன்னையும் நம் விளையாட்டையும் மறந்தேன் , கிருஷ்ணா
இன்றே தெளிவுற்றேன் , ஆயினும் விஷமக் கண்ணா
இம் மா மாயை உன்னை என்னிடம் இருந்து மறக்கும் ??, ஆ !
என்னை உன்னிடம் இருந்து மறைக்க திறன் அற்றதே
என்னை தேடுவது போல் நீ செய்யும் பாசாங்கும் விளையாட்டா!!
கார்முகில் வண்ணா உன்னை காணாமல் தவிக்கின்றேன். இம்முறையும்
நானே தோற்றேன் என்று வைத்துக்கொள் ,
அந்தோ வந்து என்னை ஆட்க்கொள்ளே !
Comments