குருவரும் கூடும்தானே


நாட்டமுடன் நல்லதொரு எண்ணெய் கொண்டு
நால்வேதம் வரித்து தந்த கலசநீர் காட்டி
கசடர   மாபொடி  திரவியம்  தேய்த்து
களிப்புர  பல நீரும் இளநீரும்  பாரு

பாங்காக பசும் பால் தயிர்தான்  சாற்றி
பார்த்து மிக தேனும் பலகனியும் 
சர்க்கரையும் காட்டி பரிவுடனே 
வாசியது  இடம் தான் வைத்து

பாசமுடன் கங்கை நீர் கலசம் காட்டி
பனிவுடனே சுகந்தமிகு பன்னீரும் சந்தனும் 
பல்வேறு படலும் கோஷமும் இட்டு
பார்த்து வந்த மலர்தான் மாற்றி

பக்தியுடன் படிப்படியாய் பூதி வைத்து 
கோலமுடன் மேளம் இட்டு தீபம் காட்டி  
தலை பணிந்து குரு பதம் பணிய 
குருவரும் கூடும்தானே !


Comments