குருபூஜை - உச்சகட்ட உள்நிலை வளர்ச்சிக்கான அழைப்பிதழ்

சிவா ஸ்வாமிகள் குருபூஜை - 4th Feb 2019


நம்மை இமைப்பொழுதும் கருத்துடன் காத்துவரும் குருவுக்கு நாம் நம் நன்றி உணர்வை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பே குருபூஜை ஆகும்.
நம்முடன் சிவா எப்பொழுதும் இருப்பதை இங்கு நினைவுகூறுகிறேன்



இம்முறை ஸ்ரீ சிவா ஸ்வாமிகள் குருபூஜை வழக்கமான நிறைவுடன் நடந்தேறியது , அருள்நிலையாளர்கள் பலரும் வருகை புரிந்து அதன் சிறப்பை மேலும் சிறப்பாக்கினார்கள்.



பன்னிசை  குழு





திரு முருகையன் அவர்கள் தலைமையில் , தில்லை திருமுறை மன்றம் அமைப்பில் சுமார் 20 ஆன்மநேய அன்பர்கள் வந்திருந்து தேவாரம், திருவாசக தேன் விருந்து படைத்தனர்.



ஹோம பஸ்மம்

கிட்டத்தட்ட 46 வகையான மூலிகை ஹோமத்தில் சேர்க்கப்பட்டது. இதை பெரும் முயற்சியுடன் கசவனம் பட்டி நந்தி ஸ்வாமிகள் பெருவாரியான ஜீவ மூலிகைகளை சேகரித்து அர்ப்பணித்து மகிழ்ந்தார்.







காசி அமைப்பு







சிவதிரு சந்தோஷ் அவர்கள் (பொள்ளாச்சி) சிறப்பாக செய்திருந்த காசி அமைப்பு கொண்ட தாமிர தொட்டியை அருட்சிவ 
திருச்சி குருமூர்த்தி ஸ்வாமிகள் எடுத்து வந்து அதற்கு உயிர்ப்புயூட்டினார்


ஓலை பூ

ஓலை பூ ஸ்வாமிகள் தன் கரத்தால் செய்த ஓலை பூக்களை அர்ப்பணிக்க அவை சிவா ஸ்வாமிகள் அலங்காரத்தில் மெருகேற்றியது .





தவத்திரு திருவண்ணாமலை ஸ்வாமிகள் தன் அர்ப்பணிப்பை  யோகா ஆசன  முறையில் செய்து மகிழ்ந்தார்.

அன்னதானம்

வழக்கமான சிரத்தையுடன் திரு கருணாகரன் அனைத்து குருபூஜை அன்னதானதுடன் வள்ளலாரின் மூலிகைகள் சேர்த்து கொண்டுவர அதனுடன் அம்மா சமைத்துக்கொடுத்த தூதுவளை துவையல்  அருள் விருந்தாக பரிமாறப்பட்டது.



சிவபூஜை


சிவபூஜை அன்பேர்கள் வழக்கமான சிவபூஜை செய்து அருளினார்கள் 

ஹோம பஸ்மம் ஓர் சிந்தனை


சாம்பல் நாம் தீயில் எறிந்து முடிந்த மிச்சமாக பார்க்கின்றோம் ஆனால் அதே சாம்பலை யோகிகள் தீயினால் எரிக்க முடியாத பொருளாக உணர்கின்றனர், அதனால் காசியில் இச்சாம்பல் உயிர் பொருளாக பார்க்கப்படுகின்றது.

உடலை எரித்த பிறகு எஞ்சும்  இந்த சாம்பலில் உயிர் ஆற்றல் தஞ்சம் அடைகின்றது .. அவற்றை சிவன் தன் மீது பூசி அவ் உயிர்களுக்கு மோட்ச விடுதலை அளித்து மகிழ்கின்றான் என்று காசி புராணம் கூறுகிறது....

சக்தி மிகுந்த இடத்தில் ஏற்றப்படும் விளக்கின் கரி மிகவும் மிகுந்த திலகம் மற்றும் கண் மையாக பயன்படுத்தபடுகிறது
இதை இன்றும் வழக்கத்தில் வைத்துள்ளனர் காசி மக்கள்...






------- நடராஜர் கோயிலில் மற்றும் சிவபுரி பள்ளியில் நடந்த அன்னதானம் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் பற்றி வேறு பதிவில் தொடர்வோம்

Comments