தாமதம் தான் உனக்கு அழகோ !
வான் மறைகள் போற்றும் குன்றாக் குணமே
தான் எனது இல்லா தனிப்பெரும் அருள்சொறிவே ! அருளே
வாலி போல் முன்நிற்க உன் பலம் உருமென்று நினைத்தாயோ என்மனத்தை
மறைந்தே காக்கும் கோனே குறைவில்லா உன்நாமம் ஒருமுறை ராமா என்று
சொல்லப் போதாதா , வானே முன் நிற்கும் என்பார் நல்லோர்
தாமதம் தான் உனக்கு அழகோ ! ராமா , என்னை கண்டுகொள்ளே !
Comments