அருளாலே சிவமாகி வந்தான் அவன்
வெளியாகி ஒளியாகி நின்றான் அவன்
ஒலியாகி ஒளியாகி சுயம் ஆனவன்
வெளியாகி விண்ணாகி பரம் ஆனவன்
ஊனாகி உயிராகி உணர்வானவன்
அன்பாகி அருளாகி எமை வென்றவன் ! (அருளாலே...)
காற்றாகி கனலாகி விரிந்தான் அவன்
புனலாகி அருளாலே புவியானவன்
கடல்ஆகி மழையாகி பொழிந்தான் அவன்
மரமாகி பழமாகி கணிந்தான் அவன் ! (அருளாலே...)
மண்னோர்க்கும் விண்னோர்க்கும் பொதுவானவன்
எல்லோருக்கும் எளியோர்க்கும் அன்பானவன்
மேலென்றும் கீழ் என்றும் இல்லாதவன்
அன்பர்க்கு அருள் தந்து மகிழ்கின்றவன் !(அருளாலே...)
எட்டிற்கும் இரண்டிற்கும் அப்பால் அவன்
இரவிர்க்கும் பகலுக்கும் நடுவானவன்
வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதவன்
உள்சென்று உணர்வோர்க்கு எளிதானவன் !(அருளாலே...)
Comments