விநாயகர் அகவல் -அங்குசம் வாசியோக பயிற்சி


  விநாயகர் அகவல் என்பது நமக்கு ஔவை அருளிச்செய்த அற்புத யோக பொக்கிஷம் ஆகும் இதில் உள்ள யோக ரகசியங்களை நாம் காசி செல்லும் பயணத்தில் ஆராய்ந்தோம், கூறியிருந்தோம்


 இதில் வரும்  வரிகளில் உள்ள மிக நுட்பமான வாசியோக பயிற்சியினை நமக்கு சிவா மகா அன்னதானத்தின் போது வெளிப்படுத்தி அருளினார்.

 அவற்றைப் நாம் சற்று தெளிவுபட இங்கு பார்ப்போம்

ஆறா தாரத்து அங்குச நிலையும் 
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே



அங்குசம்  என்பது  விநாயகர் கையில் கொண்டுள்ள ஆயுதம் ஆகும். இது பொதுவாக யானை பாகன் கையில் இருக்கும் ஆயுதத்துடன் ஒப்பிட்டு கூறுவர்

 இதில் ஔவை ஆறாதாரத்து அங்குச நிலையும் என குறிப்பிடுகின்றாள் ஆகவே 6 ஆதாரங்கள் ஒருவகையான அங்குசம் என்னும் ஓர் ஆயுதம் போல செயல் படுகின்றன என்பது விளங்கும்.

 இதில் இவ்வாறான அங்குச பயிர்ச்சி மேற்கொண்டு உள்ளே செல்வோர்க்கு ஏற்படும் நிலையினை அடுத்த வரியில் விளக்குகின்றாள்

 பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

எவருக்கும் வசப்படாத இந்த மனம் சதா சர்வ காலம் பேசிக்கொண்டே இருக்கின்றபடியால் இதனை பேரா என்று சொல்லி அவ்வாறு  மனத்தினை "பேச்சுரை யறுத்தே"  என்ற மோன நிலைக்கு கொண்டு செல்லும் ஓர் அற்புத பயிற்சியை நமக்கு தந்தருளினாள்


இந்த பயிற்சியை நாம் ஓர் சுத்தமான இடத்தினை தேர்வு செய்து ,நம்மை முழுதும் தளர்வு படுத்தி ,இடதும் வளதும்  இல்லாமல் சுவாசம் சமமாக செல்லும்படியாக ஓர் நிலை செய்வித்து .நம் முழு கவனம் புருவ மத்தியின் கண் வைத்து உணர்வினை கூட்டி இந்த அங்குசம் அமைப்பினை உருவக படுத்தி 
 உணர்வினால் அவ்வாறு நுனி(புருவ மத்தி) பகுதியில்  ஆரம்பித்து பின்பு சிறுக சிறுக உள்ளே வளைந்து சென்று உச்சிக்கு கீழே உள்  நாவுக்கு  மேலே என்று அறியும் நடு இடத்தே சென்று நிற்பதை இங்கே உணர வேண்டும்.

 அங்கே உச்சியில் இருந்து உள்ளே  ஓர் ஒளி  வருவது போன்று ஓர் உணர்வுடன் அதனை முழுவதுமாக பின் முதுகு தண்டுவடம் வழியாக கடைசி ஆதாரம் முடிய சென்று பின்பு நேரே மேல் எழும்பி உச்சி நடுவே வந்து நிற்பதை உணர்தல் வேண்டும்.

Comments