ஒரு முறையேனும் என்னைப்பாரேன் !

           
       ஒரு முறையேனும் என்னைப்பாரேன் !         
photo courtesy: https://fineartamerica.com/featured/cosmic-cobra-ann-radley.html

பொழுதும் புலர்ந்தது பொன்னொளி தோன்றிற்று
       முழு சூரியன் உதித்தனன் நேரமும் போகின
இன்னமும்  உள்எழ தயக்கம்தான் என்ன 
       ஐயா உன் முகம் காண வாடுகின்றேன்
உன்னை தவிர வேறொன்றும் அறியேனே ஐயா
      இச்சிறியேனிடம்  உன்தயக்கம்தான் ஞாயமோ 
சோதனைதான் போதாதோ சிற்றம்பலவா
      பெற்றது நீ என்னை பற்றற உற்றது நான் உன்னை 
இனியும் பிடிவிடுவேன் என சிந்தனையோ 
      ஐயா என்னை மறுத்தல் ஆகாதே 
ஒரு முறையேனும் என்னைப்பாரேன் !

Comments