photo courtesy :www.kalkionline.com |
புளி என்னும் உணர்வுடன் ,மிளகு என்னும் அறிதல் சேர்த்து
சிறிது கன்மம் எனும் உவர்ப்பை கூட்டி - பக்குவமாய்
என்னை ஞானம் என்னும் உணவாய் உருக்கும் உமையே
எனை ஈண்ட அன்னையே அகிலமெல்லாம் காக்கும் அன்னபூரணியே
வினை முடித்து எனை தடுத்து என்னை உந்தன் கந்தனுக்கு
ஊட்டி மகிழும் அன்னையே என் அய்யனின் சரிபாதி கொண்டவளே
அருள்ஞான வடிவன் என்னை பாதி கடித்து மீதி விட்டு
விளையாட சென்றானே என்னை முழுதும் தின்று தீர்க்காமல் விட்டானே
அந்தோ ! நான்தான் பக்குவம் தவறினேனா -நம் குடும்பத்திற்கு
பாதி ஒன்றும் புதிதல்லவே ஆயினும் - என் அன்னையே
அவனுக்கு அருணகிரி என்னும் கிளி அவனை கொத்திய கதை கூறி
பக்குவமாய் என்னை முழுதும் ஊட்டி அருளே !
Comments