சிவாவும் புத்தகமும்

           ரு சமயம் நான் சித்தர்களுடைய புத்தகங்களை தேடி வாங்கி படிப்பதில்  மிகுந்த ஆர்வம் உடையவனாக இருந்தேன் .பெரும்பாலும் சித்தர்கள் புத்தகங்களை படிப்பவர்களுக்கு இந்த அனுபவம் இயல்பானதுதான்.
நாம் ஒரு புத்தகத்தில் ஆரம்பித்து அப்புத்தகத்தின் மூலமாக வேறொரு சித்தருடைய புத்தகம் அல்லது அதே சித்தருடைய புத்தகமோ நமக்கு குறிப்பாக கிடைக்கும் அது படிக்க படிக்க விரிந்துகொண்டே போகும். நாம் அந்த அனுபவத்தின் ஆழ்ந்து செல்லும் போது நமக்கு அந்த சித்தர்களே வழிகாட்டுவது போல அவை அமையும்.

     இவ்வாறு நான் எந்த புத்தகம் வாங்கினாலும் அதை சிவாவிடம் காண்பித்து பின்பே அவற்றை படிக்க முற்படுவேன் ஒரு சில சமயம் சிவா அந்த புத்தகத்தை வாங்கி சிறிது படிப்பார் அல்லது அப்படியே நம்மிடம் திருப்பி கொடுத்துவிடுவார்.

      இந்த மாதிரியான தருணங்களில் எனக்கும் என் நண்பர்களுக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

     எனக்கு ஏதேனும் கேள்வி மனத்தில் இருந்தால் அந்த கேள்விக்கான பதிலை சிவா ஆச்சரியமான முறையில் வெளிப்படுத்துவார் ,பலமுறை இவ்வாறு நான் புத்தகங்களை சிவாவிடம் காண்பிக்கும்  போது சிவா ஏதேனும் ஒரு பக்கத்தை பிரட்டி அப்பக்கத்தில் உள்ள பகுதியை என்னையோ அல்லது அருகில் இருக்கும் நண்பரையோ படிக்கச் சொல்வார்.
          அவ்வாறு படிக்கும் பொழுது நான் மனதில் நினைத்திருந்த கேள்விக்கான பதிலாக அந்த பகுதி அமையும் ஒரு சில சமயம் நான் இதை உணராமல் வெறுமனே படிக்கும்பொழுது சிவா "மீண்டும் படி" என்பார், நான் மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது அந்தக் கேள்வி எனக்கு நினைவுக்கு வரும் அப்பொழுது சிவா மென்மையான புன்னகை புரிவார் நானும் அதை உணர்ந்து புன்னகைப்பேன் 

           சிவா தன்னுடைய ஓய்வு நேரங்களில் திருமந்திர பாடல்களையும் திருவருட்பா அகவல் படித்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவார் அங்கு வரும் தமிழாசிரியர் ஒருவரிடம் திருமந்திரப் பாடல்களை படிக்கச்சொல்லி அதன் அர்த்தங்களை கேட்டு மகிழ்வார்.

சுப்பிரமணியர் ஞானக்கோவை
             ஒருமுறை நான் சுப்ரமணியர் ஞானக்கோவை எனும் ஓர் புத்தகத்தை சிவாவிடம் காண்பித்தேன் அதை படித்து  சிவா ஆனந்தத்தில் ஆழ்ந்தார்,அவருடையஅனுபவங்கள் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன என்று கூறி புத்தகத்தை தன் தலை மீது வைத்துக் கொண்டார் தமக்கும் அந்த புத்தகம் பிரதி வாங்கி வருமாறு கூறினார். 

         தன் அபிமான குருவான கடப்பை  சச்சிதானந்தர் அவருடைய புத்தகத்தை வாங்கி படிக்கச் சொல்லுவார், அதில் யோகப்பியாசம் ,ஜீவ ஞான ரகசியம் -எனும் நூல்  அற்புதமான வாசியோக நுணுக்கங்களை கொண்டது.

சிவா அனுபவித்த புத்தகங்களில் ஒரு சில
யோகாப்பியாசம்
முருகப்பெருமான்-  யோக ஞானம் 500
மச்சமுனி நாயனார் திருமந்திரம்
அகத்தியர்
பரிபாஷை 300
திருவாசகம் திருவாசகமும்
சிவராஜ யோகமும்
கருவூரார்
பலதிரட்டு 
புலிப்பாணி  சிதம்பரம்-25
போகமுனிவர் காயசித்தி கற்பங்கள்
கோரக்கர் சந்திரரேகை
அகத்தியர் வாலை ஞான பூஜா விதி  
யூகிமுனி வாத காண்டம்
மகேஸ்வர விளக்கம்




Comments

ashwin said…
அய்யா இந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?
Emptiness said…
Majorly its available in
தாமரை நூலகம் http://www.noolulagam.com/books/?pubid=270
Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026, India