பதம்தான் பிரித்து இந்த உணரும் வகை ஏதும் அறிந்திலனே
அடி அறியேன் தொடை அறியேன் செய்யுள் அதன் உறுப்பாம்
அடிதொறும் தலை எழுத்தை ஒப்பும் வகை அறியேன்
அசை அறியேன் சீர் அறியேன் எழுத்துமுறை அறியேன்
அது ஒழித் தொன்றின் வகை ஏதும் அறிந்திலனே
பண் அறியேன் பாட்டறியேன் பாலையும் தான் பகுப்பாம்
பாட்டில் உள்ள ஏழிசையின் முறையும் அறிந்திலனே
உன்னை மிக மறந்தறியேன் மறந்தும்மிக மாயை
உள் புகுந்து இருக்கும் வகை ஏதும் அறிந்திலனே
என் பாட்டை மழலை என ஏற்றருளும் பதியே இதனால்
உன் தகுதி குறைபடுமோ ஏதும் அறிந்திலனே
என் நிலமை மிக்கஉணர் அறிந்தே இன்னும் இம்
மகாதேவன் உள்ளிருந்து நீயும் என்னை கேட்டாள்
என் செய்வேன் யார்குறைப்பேன் ஏதும் அறிந்திலனே !
Comments