இன்னும்அறியேன் என்று ஓர் பொய்யேனும் சொல்லே !
photo courtesy :http://www.skandagurunatha.org/ |
ஈண்டு தாய் தன்யிரு கை முகம் மறைத்து
தன்னை 'காணும்' என்பாள் குழந்தையோ
அம்மாவின் முகம் காணா அழும் பின்பு
தாய் மறைத்த கை எடுத்து 'இதோ!' என்பாள்
உடனே குழந்தை குதுகலித்து ஆச்சர்யமுறும்,
அன்னையிடம் தாவும் அதுபோல இந்த
புவனமெல்லாம் ஈண்ட என் அன்னை
அவ்வப்போது தன்னை மறைபித்தும் காண்பித்தும்
என்னிடம் விளையாடுவாள் அவ்வாறு மறைத்த
தருணம் நான் அழுவது தாளாமல், மறைத்தாலும்
காண்பித்தாலும் குழந்தையை விட்டு விளையாடும்
அன்னை பிரிந்ததில்லை என்ற குறிப்பை
உன் வழியே அய்யன் உணர்த்த ஆனந்தம்
கொண்டேன் குதித்தேன் ஆடினேன்! ஆகினும்
என் அன்னையின்பால் கொண்ட அளவில்லாத அன்பால்
உன் குறிப்பு அறியாதவன் போல் அன்னையிடம்
ஆச்சர்யம் குன்றாது இருந்தேன் !என் அருட்குருவே
அருள்அமுதே நான் உன்குறிப்பை அறிந்தேன்
என என் அன்னையிடம் நீர் கூறுவாயோ !
அச்சோ நான் அறிந்தேன் எனத் தெரிந்தால்
என் அன்னை என்னை ஆச்சர்யம்முர
வைத்து விளையாட மறுப்பாளோ !அல்லது
என்னை இக்கற்றவர் கூட்டத்தில் தள்ளுவாளோ !
அந்தோ நான் என் செய்வேன் எங்கு சொல்வேன்
என் அருளே ஞானவடிவே என் அன்னையின்
அன்பை விட பெரிதோ யான்அடையும் ஞானம் ?
ஆகினும் என்னை இன்னும் சிறிது
என் அன்னையிடம் களித்திருக்க விடுவாயோ
என்உள்ளம் ஏங்குவது நீ அறிவாயே ,ஆகையால்
என் கருணை வள்ளலே என் அன்னை வந்து கேட்டாள்
நான் உன் குறிப்பு இன்னும்அறியேன்
என்று ஓர் பொய்யேனும் சொல்லே !
Comments