சிவாவின் ஆனந்த நடராஜர் அனுபவம்

 சிவாவின் ஆனந்த நடராஜர் அனுபவம் 

ஒருநாள் சிவா நடராஜரின் பக்கத்தில் வலதுபுறம் தான் நிற்பதுபோல ஒரு அனுபவத்தைப் பார்க்கின்றார், அதை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
 சிவா நடராஜரின் பக்கத்தில் தான் நிற்பதுபோல பார்க்கின்றார் குனிந்த தலை நிமிராமல் தூக்கிய திருவடியே பார்த்துக்கொண்டிருந்த அவரது கண்கள் ,மிகவும் நிதானமாக பொறுமையாக உள்ளத்தில் ஏதோ ஒன்று படபடப்புடன் ஒரு பதைப்புடன் பக்கத்தில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் பரம்பொருளான நாதனை சிறிதே ஓரக்கண்ணால்  தயங்கிய வண்ணம் பார்க்க முற்படுகின்றார்.
அவன் மேனியெல்லாம் கண்களை கூச செய்யும் மாற்று உரைக்க முடியாத சுத்த தங்கத்தினால் தகதகக்க உள்ளம் தான் ஏதோ செய்ய ,உடல் நடுங்கி உள்ளம் நெகிழ்ந்து, தன் கைகளால் நடராஜரின் கண்ணத்தை சிறிதே கில்லி முத்தமிடுகிறார் ,பச்சிளம் குழந்தையின் பிஞ்சு முகம் எவ்வாறு இருக்குமோ அதைவிட மிகவும் மென்மையாக இருந்ததாம்.
அப்பொழுது  நடராஜர்
(நாம் ஒரு முக்கிய வேலையில் இருக்கும்போது நமக்கு அன்பானவர்கள் ஏதேனும் சிறு தொந்தரவு செய்தால் நமக்கு ப்பிச் என்று கோபம் வருவது போல) "ப்பிச்" என்று சிவாவை கூர்ந்து  பார்க்கின்றார்,அந்த ஊடுருவும் பார்வை சிவாவை உலுக்கி உயிரை துளைத்துச் ஆன்மாவிடம்  ஒன்றிட செய்தது,அவனே தானாக ஆன்மாவை பார்க்கும் பார்வையாக பிறந்தது
அச்சமயம் நடராஜரின் முகத்தில் கோபம் தணிந்து சிவாவை பார்த்த கணத்தில் கனிவு முகத்துடன் மாற... ஆ ஆகா !! என்ன ஆனந்தம் அற்புதம்.இதை சொல்லும் போதே கண்ணீர் ததும்ப கண்கள் மேலே சொருகி கை மேல் தூக்கி ஏகாந்தத்தில் நுழைகின்றார்.


காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
-- திருஞானசம்பந்தர்

Comments