நான் உன்உரு படுவேன் என்று ஓர் பொய்யேனும் சொல்லே
அப்பா நான் பிறக்கும் காரணம் கூறி என்னை பிறப்பித்தாய்
பிறந்தேன் ,அக்கணமே அதையும் மறந்தேன். அந்தோ !
அப்பா நான் செய்த பிழை அனைத்தும்
பொறுத்து என்னை வளர்ப்பித்தாய், வளர்த்தேன்
அந்தோ நான் படியாதது கண்டு அன்னையிடம் கடிந்தாய்யன்றி என்னிடம் கடுச்சொல்லாய்
பருவம் அடைந்தேன் படிக்கசெல் என்றாய் , உன்னை பிரியேன் என அழுதேன் அடம் பிடித்தேன்
சரி என் கண்முன்னே படி என்று , என் அன்பின் உருவம் சிவா இவரே உன் குரு என்றாய்
அந்தோ மூடன் நான் சோதிக்காமல் ஏற்க்க மாட்டேன் என்றேன்
உன்னிடமே வாதிட்டேன் , தக்க நிலை உணர்த்து தன்னை சோதனைக்கு
உள்ளாக்கி என்னையும் அவருக்கு ஆளாக்கி ஆட்கொண்ட என் குருவே
கருத்துடன் படிப்பித்தாய் படித்தேன்
அன்பும் உண்மையும் நற்பண்பும் ஒழுக்கமும் எளிமையும்
மேல்வழிக்கு பாதையாம் ஜீவகாருணியமும் கலந்தே தந்தான்
என் குரு என்னை பற்றி பெருமையாய் உன்னிடம் கூறும் போது நீ பெற்ற ஆனந்தம்
அப்பா நான் ஓரம் நின்று பார்த்தேன் அச்சோ நான் என்னென்று சொல்வேன்
அப்பா நீ அன்று அதிகாலை என் படிப்பு நிலை கேட்டு அறிய வந்தாயோ என்னவோ
உன் அந்த நிலை கண்டு களிப்புடன் கரைந்தான் என் குருநாதன் உன்னுள் , கலந்தாய்
துடுப்பு இல்லா ஓடம் போல் தத்தலித்தேன்
அன்னை வற்புறுத்த இல்லறம் புகுபித்தாய் புகுந்தேன்
இதுவே நல்அறம் என்றாய் கற்றநிலை அனைத்தும் இதில் பயிற்றிவித்தாய் பயின்றேன்
அருளே நீ இனி மேல்படிப்பு படிக்க என்றாய் , நானோ நீ என்னுடன் இருக்க
இவை ஏன் என்றேன் , இதுவோ பிள்ளை வளர்க்கும் நிலை என்று உலகம் உன்னை இழிக்கும் என்றாய்
சிற்றம்பல கல்வியே கல்வி என்றாய் , என் அருளின் வடிவம் வள்ளல் இவரே உன் ஞானகுரு என்றாய்
நானோ நன்கு கற்பது போல் பாசாங்கு செய்தேன் , வீனே காலம் கழித்தேன்
கழிந்தன காலம் அய்யோ !!
என் அருட் குருவே , அய்யன் வந்து கேட்க்க நான் உன்உரு படமாட்டேன் என்று நீர் கூறுவாயோ
அந்தோ அச்சொல் கேட்டு என் அய்யன் என் பொருட்டு பாடும் துன்பம் நான் பார்க்க தகியேன்
என் ஞானகுருவே என் உள்ளம் படும் துன்பம் நீ அறிவாயே,
நீ இவ்வளவு எளிமையாய் சொல்லியும் நான் பற்றாத பதர் ஆகினேன் என்செய்வேன் .என் அய்யன் கேட்டாள்
Comments