அருள்விளக்கே
-
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
-
- என்னறிவே என்னுயிரே எனக்கினிய உறவே
-
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
-
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே! (01)
-
-
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
இதை வள்ளலார் மர்றொரு இடத்தில் "ஜோதி ஜோதி ஜோதி சிவம் ", என்று குறிப்பிடுகின்றார்
மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் " மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச் சுடரே ! " என்று கூறுகின்றார். ஜோதி என்ற மலர் மலர்ந்து அதனுள் ஓர் ஜோதி இருந்தால் எவ்வாறு இருக்குமோ அதை போன்ற தொரு நிலை.
"சோதியே சுடரே சூழோளி விளக்கே " -திருவாசகம் (அருட்பத்து)
இதுவரை யாரும் குறிப்பிடாத ஒன்றை இங்கு வள்ளலார் வைக்கின்றார் "அருள்விளாக்கே" ஞானிகள் இந்த ஏழு ததுக்கலால் ஆகிய இந்த உடம்பை ஜோதி வடிவமாக சிந்தித்தது இல்லை. ஆனால் கருணையே வடிவான வள்ளலார் ,இதை சாத்தியம் என்று செய்து காண்பிக்கின்றார்.
ஆகவே , இந்த ஜீவன் (அருள் விளக்கு)அருள் வடிவம் கொண்டு இதனுள் இருக்கும் ஆன்மா வடிவை ( அருட் சுடரே) கண்டு அதனுள் இருக்கும் பரம் பொருளை ( அருட் ஜோதி) சிவன் என்று கண்டுகொள்ளும் வித்தையை இங்கு விளக்குகின்றார்.
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
"முக்தி என்பது முன் நொரு சாதனம் சித்தி என்பது நிலை சேர்த்த அனுபவம் " என்பது வள்ளலார் கூற்று ,
இதில் அருளினால் ஏற்படும் அமுத நிலை முக்தி ஆகும், அவ் நிலையினால் ஏற்படும் அனுபவம் சித்தி ஆகும் இவ் இரண்டால் கிடக்க பெரும் பொருள் அருளே ஆகும்.
இவற்றை நாம் அடையும் வழி தான் என்ன ?
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
உள்ளத்தில் இருக்கும் குற்றம் இருள் ஆகும், உள்ளம் மற்றும் ஜீவன் இரண்டும் இருவேறு குற்றங்களை கொண்டது இவை நம் உடைய ஆளுமையல் இருப்பதால் இவற்றை இறைவன் நேரடியாக விளக்குவது இல்லை , ஜீவகாருணியம் என்ற திரவுகோல் கொண்ட ஜீவன் மீது கருணை கொண்ட இறை கடிந்து ( அதட்டி ) எப்பொழுது கடிந்து கொள்வோம், நாம் சொல்லை கேட்கவில்லை என்றாள் நாம் கடித்து , ஆகவே இருள் மற்றும் மருள் நமக்கே உரித்தனது என்றாலும் இறைவன் ஓர் படி இறங்கி நமக்காக கடிந்து கொள்கின்றான் என குறிப்பிடுகின்றார்.
"ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போதகத்தினீ யிலையோ வருணாசலா (அ)" - அருணாசல அக்ஷரமணமாலை
என்னறிவே என்னுயிரே எனக்கினிய உறவே
இங்கு "பதி பசு பாசம்" என்கின்ற சித்தாந்த அடிப்படையை வைக்கின்றார்
பதி என்பது இறைவன் - அறிவு வடிவம்
பசு என்பது உயிர் வடிவம்
பாசம் என்பது இந்த உலகம் அல்லது இதனுடன் இணைதுள்ள பந்தம்.
பதி வடிவம்
உரு -4
அரு - 4
உருஅரு 1 ஆக 9 நிலை/ வடிவம்
பசு - 3 நிலை
இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
1. விஞ்ஞானாகலர்`( விஞ்ஞா+அகலர் )
2. பிரளயாகலர் ( பிரளய + அகலர் )
சகலர் - பாசப்பற்று நீங்காதவர்
அகலர் என்றால் கலை நீங்கினவர்
கலை - மாயாகாரியம்
பாசம் - 3 குற்றங்களை உடையது
1. ஆணவம் , 2. கன்மம் , 3. மாயை
இதையே வள்ளலார் அற்புதமாக கூறுகின்றார்
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
இங்கும் குறிப்பிடத்தக்கது கடிந்து
மருள் என்பது மயக்கம் அல்லது பயம் இது உயிரின் குற்றங்களாகும். மாமணி - மிக பெரிய மாணிக்கம் போன்ற ஒளியை கொண்டு இவற்றை விளக்குவாதால் அவனுக்கு நிகர் யார் ? (மாற்றறியாப் பொன்னே)
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா
"சிற்சபை யில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் "
மன்று என்றாள் சபை அதில் நடம் புரிகின்ற ,கல்யாண குணம் கொண்டவன் இறைவன் ( மணவாளன் )
கீதை - "பகவானுடைய கல்யாண குணங்கள், ப்ரபாவங்கள், ஸ்வரூபம், தத்வம், ரஹஸ்யம், உபாஸனை, கர்மம், ஞானம் "
எனக்கே தெருளளித்த திருவாளா ஞானவுரு வாளா
அறிவிலே இருக்கும் குற்றம் (அஞ்ஞானம் ) நீங்கி நமக்கு கிடைப்பது தெருள் - உணர்வுறு
இதை அவன் நேரடியாக அளிக்கின்றான் ( இங்கே கடிந்து என்று பயன்படுத்த வில்லை ) அவன் வடிவம் ஞானமே வடிவம் (ஞானவுரு)
வேறு என்ன சொல்ல ?
வள்ளலே இச்சிறியேன் செய்மொழி ஏற்று அருளே !
Comments