வாசியோகம் - VasiYogam

குருவே துணை
வாசியோகம் (சிவயோகம்)
-சிவா குருபூஜை (5 ஆம் ஆண்டு) சத்சங்கக் குறிப்பு
    
வாசி என்பதின் அடிப்படையை அறிவதற்கு முன் நாம் அகர உகர நிலைகளை அறிதல் வேண்டும். இதன் துவக்கம் சிவன் பார்வதிக்கு உபதேசித்தாக சரயோகம் என்ற நூல் குறிப்பிடுகின்றது.
     வாசி என்பது நம் சாதாரண சுவாசமுறை அன்று ஒர் ஒளிச்சுவாச முறையாகும்.
     இதில் அகர உகர எழுத்து நிலைகளை பார்ப்போம். 
        அகரம் என்பது பிங்களை என்றும் சூரியன் என்றும், ஒளி என்றும், விந்து நிலை என்றும், வலது சுவாசம் என்றும் அறியப்படவேண்டும். இது இடது பெருவிரலில் துவங்கி புருவமத்தியில் ஒடுங்கும்.
     உகரம் என்பது இரண்டு என்றும், இடகலை என்றும், உணர்வு என்றும், சந்திரன் என்றும், சுரோனித நிலை என்றும், இடது சுவாசம் என்றும் அறியப்படவேண்டும்.
       மகரம் என்பது நடுநாடி என்றும், உயிர்நிலை என்றும், பிராண நிலை என்றும், ஒடுங்கிய நிலை என்றும் அறியப்படவேண்டும். இவ் அகரம் மற்றும் உகரங்கள் ஒருவித சுழற்சி முறையில்() புருவமத்தியில் சுழற்சி பெறும். இவ்வொளி நிலைகளை வைத்து செய்யப்படும் யோகம் பிராசாத யோகம் என்று அழைக்கப்படும்.
     இவ்வாறு ஒடுங்கிய நிலையில் ஏற்படும் சுவாச நிலை ‘சித்’ என்றும் “சித்” பிராணன் என்றும் அழைக்கப்படும். இவ்வாறு இச் “சித்” பிராணனை கைவரப் பெற்றவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
     இச் சித் அல்லது சீர் இறைவனின் சுவாசம், ஒளிச்சுவாசம் மற்றும் எதனாலும் தடைபடாத சுவாசம் அல்லது சூட்சம சுவாசம் ஆகும்.
     இதைக் குறிப்பிடவே சீர்+அங்கன் (சீரங்கன்) சீர் என்ற ஒளிச்சுவாசத்தை தன் உடலாக கொண்டவன் என்று பொருள்பட அப்பெயரைச் சூட்டினர்.
     இதையே நின் தாள் என்றும் பெருஞ்சீர் என்று பாடினர்.
                               
                                நெற்றிக்கு நடுவே புருவத்து இடைவெளியில்
                                உற்று உற்று பார்க்க ஒளிவிடும் மந்திரம்
                                பற்றுக்கு பற்றாய் பரமன் இருக்கும் இடம்
                                சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே
                                                                                                                           -திருமந்திரம்


                இவ்வாறு உணர்வுப்பூர்வமாக நாம் ஒளிச்சுவாசத்தை நம்முள் கொண்டுவரும்போது வாசியானது நடைபெறும்.
     இதில் அடிப்படையான பயிற்சி முறைகள் நம்மை வாசிநிலைக்கு அழைத்து செல்ல உதவியாக இருக்கும் அவற்றை இங்கு காண்போம். அவற்றில் விளக்குத்தவம், புருவமத்திதவம் மற்றும் கண்ணாடித்தவம் மிகவும் பிரதானமானவை.
     விளக்குத்தவம் இவற்றை முழுவதும் எழுத்துக்களால் தருவது சற்று சிரமமானது ஆகவே இங்கு இதன் முக்கிய குறிப்புக்களையும் இதன் முக்கியத்தையும் பதிவுசெய்ய முற்படுவோம்.
     திருமந்திரகுறிப்பு
           விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
           விளக்கினுள்ளே விளக்கினைத் தூண்டி
           விளக்கின் விளக்கை விளக்க வல்லார்க்கு
           விளக்குடை யான்கடில் மேவலும் மாமே              
- திருமந்திரம்

இது அஷ்டாங்க யோகத்தின் கடைசி மூன்றின் தொகுப்பாக இத் தியானம் நடைபெறவேண்டும்.
தாரணை என்பது Subject அதாவது தியானிப்பவர் மற்றும் தியானிக்கப்படும் பொருள் Object மட்டும் இருக்கும் தன்மை இது முதல் நிலை. இதில் நாம் விளக்கின் ஒளிச்சுடரை பார்க்க நாம் மற்றும் அவ் விளக்கின் ஒளி மட்டும் சூழ்ந்து இருக்கும் நிலை.
தியானம் என்பது நாம் அவ்வொளிச் சுடராக மாற்றம் பெரும் நிலை(Subject become Object).
 சமாதி நிலை என்பது நாம் மற்றும் ஒளியும் அற்ற நிலை (No Subject No Object) இவ்நிலைகளை உணர நாம் தொடர்ந்து விளக்கின் ஒளியை பார்த்து தியானம் பழக வேண்டும்.

இதையே மாணிக்கவாசகரும்
“மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே” என்று குறிப்பிடுகின்றார். இதில் நாம் பழகிய பின்பு கண்களால் செய்யும் பயிற்சியை பழகுதல் வேண்டும்.
சுவாசம் இடகலையாக வைத்து. நம் இடது கண்களை வலது கண்காளல் பார்த்தல் வேண்டும். பின்பு பிங்களையில் சுவாசம் வைத்து நம் வலது கண்களை இடது கண்களால் பார்த்தல் வேண்டும்.
இவற்றை வார்த்தைகளில் புரிந்து கொள்வது கடினம் இப்பயிற்சியில் நாம் முன்னேற நமக்கு கண்ணாடித்தவம் உதவும். இவை அனைத்திலும் நம் புருவமத்தியில் உணர்வை கூட்டுவதே நம் பிரதான முயற்சியாகும்.
சரி, நாம் இப்பொழுது மிகவும் அடிப்படையான விளக்கங்களைப் பார்ப்போம். இவை நாம் வாசியோகத்தை பற்றிய புரிதலுக்கு உதவியாக இருக்கும்.
நம் உடலானது அடிப்படையாக நான்கு விதமான தன்மைகளால் ஆனது அவை.
1. உயிரற்ற பொருட்கள் (அடிப்படை வேதிப்பொருட்கள்)
2. உயிருள்ள பொருட்கள் ( இவை நம் சதை மஞ்ஜை போன்றவை)
3. உணர்வுப் பொருட்கள் (இவை நம் தோல் மற்றும் உணர்வு போன்றவை)
4. அறிவுப் பொருட்கள் (அறிவுச்செல்கள்)

அணுக்கள் இவற்றில் ஒளியை உணரும் தன்மை கொண்டவை நம் அறிவுப் பொருட்கள் அறிவுச்செல்கள் மட்டுமே
இவ்வாறு நம் உயிரற்ற அணுக்களை உயிருள்ள அணுக்களாக்கி அவ் உயிருள்ள அணுக்களை உணர்வு அணுக்களாக்கி. பின்பு அவ் உணர்வு அணுக்களை அறிவு அணுக்களாக மாற்றம் செய்வதே யோகம் ஆகும் இதையே சாகாக் கலை என்று உணர்த்தினர்.
நாம் எளிமையாக புரிந்துகொள்வதற்கு இச்சிறிய முயற்சி


 குறிப்பு :  இச்சதவீதக்குறிப்பு நம் புரிதலுக்காக மட்டுமே.
இதில் நாம் கவனிக்கவேண்டிய நிலை, இவ்வளர்ச்சி நிலையானது ஒன்றிலிருந்து படிப்படியாக மட்டுமே சாத்தியம். ஒன்றிலிருந்து நாம் நான்காவது நிலைக்கு செல்லுதலுக்கு சாத்தியக்கூறுகள் குறைவு. அடிப்படையில் உயிர் அணுக்களுக்கு நேரடியாக அறிவுச் செல்களாக அல்லது அறிவு அணுக்களாக மாற்றம் பெற வாய்ப்பு (50%) இருந்தாலும் அவற்றை உணர்வு முழுமை பெற்று பின்பு மாற்றம் அடையச் செய்வதே முறையாகும்.
சரி, எவ்வாறு உயிர்செல்களை அறிவுச்செல்களாக மாற்றுவதற்கு வழிதான் என்ன ?.
திருவாசகத்தேன் நமக்கு வழி கூறுகின்றது
ஊணினை உருக்கி உள்ளொளிப் பெருக்கி என்ற குறிப்பை கவனியுங்கள்.
அதாவது ஊண்ண என்ற உணர்வானது (உருக்குதல்) அதாவது பின்னம் அடையச்செய்தல் (அ) உணர்வை நுட்பமாக மாற்ற உள்வொளியானது பெருகும்.
இங்கு நம் அகர உகர சமன்பாட்டை சற்று திரும்பிப் பார்ப்போம்

நம் சமன்பாட்டின் படி அறிவையும் உணர்வையும் கூட்ட உயிர்நிலை கிடைக்கும்.
(அதாவது) அறிவு + உணர்வு = உயிர்
          அறிவு = உயிர் / உணர்வு
இதில் அறிவு (ஓளி) பெருக வேண்டும் எனில் நாம் உணர்வை பின்னத்தில் கூட்டவேண்டும் அதாவது உணர்வை நுட்பமாக்க வேண்டும்.
இதையே மாணிக்கவாசகர்
ஊணினை உருக்கி உள்ளொளிப் பெருக்கி என்று குறிப்பிடுகின்றார்.


Comments