உ
குருவே துணை
காசி – அற்புதப்பேரொளி,அமுதநீர்.
அபவித்ர பவித்ரோவா !.. புனிதமற்ற தன்மையிலிருந்து புனித்தன்மைக்கு என்று
பொருள்படும். ஏன் புனிதமற்ற தன்மை ஏற்பட்டது ? எவ்வாறு அவ் புனிதமற்ற தன்மையை புனிதமாக
மாற்றுவது ?.
ஒவ்வொரு பிறப்பும், படைப்பும் இவ்வாறு நடைபெறுகின்றது.
உதாரணத்திற்கு
நெல் விளைகின்றது அவற்றை அறுவடை செய்து அதில் உள்ள தூசு மற்றும் கற்களை களைகின்றோம்
இது முதல் நிலை சுத்தி.
பின்பு
அதனுடன் ஓட்டியிருக்கும் உம்மி என்ற சட்டையை களைகின்றோம் இது இரண்டாவது நிலை. பிறகு அதனை பக்குவமாக களைந்து சரியான அளவு தண்ணீர் மற்றும்
நெருப்புடன் சேர்க்கும் போது சாதமாக கிடைக்கின்றது இது மூன்றாவது நிலை சுத்தி இப்பொழுது அனைத்து சுத்திகளும் முழுமை அடைந்தனவா
என்றால் இல்லை.
கடைசி நிலை
ஓர் உயிருள்ள படைப்புப் பொருளால் நடைபெறுகின்றது அந்த நான்காவது நிலை சுத்தி ஜீரணம்
(அ) செரித்தல் மூலமாக அதில் இருக்கும் சக்கை நீக்கப்பட்டு (அசுத்தம்) அதில் இருக்கும்
பிராண (உயிர்) சக்தியை பெறுகின்றோம்.
இவ்வாறு
ஒவ்வொரு பொருளிலும் பிரித்துக் கூறலாம். இதில் முதல் நிலை உடலால் செய்யப்படுவது இதனை
சரியை என்று அழைக்கின்றோம். இச்சுத்தம்
செய்யும் பயிற்சி நிலையை இந்திரிய ஒழுக்கம்
என்று அழைக்கின்றோம்.
இரண்டாவது
சுத்திமுறை பக்தியோகம் என்றும் அதில் செய்யும்
பயிற்சி கரண ஒழுக்கம் என்றும், மூன்றாவது படிமுறை கிரியாயோகம் என்றும் அதில் செய்யும் பயிற்சி நிலை ஜீவ ஒழுக்கம் என்றும், நான்காவது சுத்தி நிலை
ஞானயோகம் என்றும் அதன் பயிற்சிமுறை ஆன்ம
ஒழுக்கம் என்றும் அழைக்கின்றோம் இதனையே அனைத்து யோகிகளும் மகான்களும் பலவாறு வழி அமைத்து
கொடுத்தனர்.
இவை அனைத்திலும்
இரண்டு முக்கியமான அசுத்தம் நீக்கி பயன்படுத்தப்படுகின்றன.(Detergents).
அதில் ஒன்றை
நீங்கள் பிரதனமாக கவனித்திருக்கக்கூடும் “ஒழுக்கம்”.
ஒழுக்கம் என்ற சொல்லே ஒர் அற்புதமான சொல். நாம் முன்பு பார்த்தவாறு, நம் முன்னோர்கள்
தமிழ்மொழியை மிகவும் கவனமாக அமைத்து உள்ளனர். இது அகத்தியர் தந்த மொழி என்றும் சிவன்
மற்றும் குமரன் வழி பெருமைகள் கொண்டது நாம் அறிந்ததே.
ஒழுக்கம் என்ற சொல்லை “ஒழுகு” + “கம்” என்று பிரித்து
பார்த்தால் அது ஒழுகுகின்ற கம் அதாவது,
ஒழுகுகின்ற தங்கம் (கம்- கம்மாளர் தங்கம் செய்பவர்) எச்செயல் அல்லது செய்கை நமக்கு
தங்கத்தை நமக்குள் ஒழுகச் செய்கின்றதோ அதனை ஒழுக்கம் என்றனர்.
தங்கம்
அல்லது அமுதம் ஒழுகச்செய்யும் நிலை ஒழுக்கம் என்று உணர்தல் வேண்டும்.
இதனையே
வள்ளுவரும்…..
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
விழு அப்பம்
(விழும்நீர் , அமுதம்)
சரி, நாம் ஒழுக்கம் என்பது என்ன என்று புரிந்து கொண்டோம். ஆனால், நாம்
செய்யும் செயல்கள் எவ்வாறு ஒழுக்கமானதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது?
அதற்கு நமக்கு ஓர் எளிமையான
வழியை கொடுத்து உள்ளனர். நாம் எந்த செயல் செய்யும்போது நமக்கு உணர்வு புருவமத்தியில்
நிற்கின்றதோ (அ) நம் உணர்வு அனைத்தும் புருவமத்தியில் கூடுகின்றதோ அச்செயல் ஒழுக்கம்
நிறைந்ததாகும்.
இதையே நமக்கு காசி உணர்த்துகின்றது.
சிக்கல் என்னவென்றால் நாம் பெருவாரியாக அவற்றை உணர்வதே இல்லை. அதாவது நாம் எச்செயலை
செய்யும் போதும் நம் உணர்வை புருவமத்தியில் நிறுத்தி செய்தால் அச்செயல் சுத்தமானதாகவும்
ஒழுக்கம் (அதாவது) நமக்கு அமுதத்தை அளிப்பதாகவும் அமைகின்றது.
அவ்வாறு செரிகின்ற அமுதமே நம்மை தூய்மை படுத்தி நம்மை புனித்தன்மைக்கு
மாற்றம் செய்கின்றது. சொல்லில் விவரிக்க இயலா அவ்அற்புத பேரொளிப் பிழம்பாய் விளங்கும்
காசி மாநகரில் நித்தமும் நிகழும் நிகழ்வு இச்செயலாகும். அதை நாம் உணர்ந்து அவ் நகரத்தில்
நாம் நடைபோடும்போது நம் புரிதலும் நம் உணர்வும் வேறொரு கோணத்தில் நிகழ்கின்றது.
சரி, நம்மை மூன்று விதமான கருவிகள் தூய்மை
செய்யும் என்று குறிப்பிடுகின்றோம். அதில் ஒன்று ஒழுக்கம் அதை அடைய மார்கம் உணர்வை
புருவமத்தியில் வைத்தல்.
மற்றொரு கருவியாக குறிப்பிடப்படுவது சத்விசாரம் உண்மையை விசாரம் செய்தல். இதனையே
எளிமை படுத்தி நமக்கு ரமணர் தந்த வழி “நான்” என்பதை விசாரித்தல்.
இவ்விரண்டு தன்மைகளும் நம்முள் நிகழ்த்த
நமக்கு உறுதுணையாக இருக்கும் புன்னிய பூமி இக்காசி நகரம் ஆகும்..
Comments
அதற்கு நமக்கு ஓர் எளிமையான வழியை கொடுத்து உள்ளனர். நாம் எந்த செயல் செய்யும்போது நமக்கு உணர்வு புருவமத்தியில் நிற்கின்றதோ (அ) நம் உணர்வு அனைத்தும் புருவமத்தியில் கூடுகின்றதோ அச்செயல் ஒழுக்கம் நிறைந்ததாகும்.