ஞானப்பழம்-2

ஞானப்பழம்-2 சென்ற பதிப்பின் தொடர்ச்சி, குருவருள் துணையுடன் தொடர்வோம்.
நம் தேடுதலும் கேள்விகளும் மாம்பழத்தை நோக்கியே இருந்தாலும் சற்று நாம் அமுதம், மருந்து போன்ற சில தமிழ் சொற்களை சிறிது கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

 
photo courtesy : http://palani.org 
    அதிலும் குறிப்பாக ‘ஊமை எழுத்து’, ‘மௌன எழுத்து’, ‘பேசா மந்திரம்’ என்று எல்லாம் போற்றப்படும் "
ம்" என்ற குறிப்பெழுத்தை சற்று கவனிக்க முற்படுவோம். 

     இவ்வெழுத்தை அனைவரும் மறைத்தே கூறினாலும் அருட்கருணையினால் சிறிது விரித்து உறைக்க முற்படுவோம். இதில் மருந்து என்பது ம்+அருந்து என்று ஆகின்றது.
 ம் என்பது உயிர்ப்பொருள் என்றும் அமுதம் என்றும் போற்றப்படும் பொருள். எது நம் உயிரை வளர்க அல்லது காக்க உறுதுணையாக இருக்கின்றதோ அதனை மருந்து என்று அழைத்தனர்.

     அவ் உயிர்ப்பொருளானது ‘அ’ காரத்தையும் ‘உ’ காரத்தையும் தூய நிலையில் சேர்க்க விளைவும் விளைபொருளாகும்,

     அகாரம்(8)  என்பது அறிவு என்றும் உகாரம்(2) என்பது உணர்வு என்றும் அறியப்படவேண்டும். இவற்றை நாம் ஓர் சமன்பாடாக உருவாக்கினால் நமக்கு
அ + உ = ம்  [ 8 + 2 = 10 (ய) ]

அதாவது அகாரம் + உகாரம் = மகாரம் என்ற சமன்பாடு கிடைக்கும், இச்சமன்பாட்டை சற்று வேறு கோணத்தில் பார்ப்போம்.

சற்று சிந்திக்க  Einstein    E = m c2  சமன்பாடு நினைவிற்கு வருகிறது,

இதிலிருந்து,
E என்பது  energy அல்லது மகாரம் உயிர்ப்பொருள்
m என்பது mass அல்லது உகாரம் உணர்வுப்பொருள்
c என்பது Speed of Light அதாவது அகாரம் அறிவுப்பொருள் (light of consciousness)

சரி இவற்றை நாம் சற்று முறைப்படுத்தி பார்ப்போம்,
    
அதாவது உணர்வு என்பது பொருள்தன்தை கொண்டது, அறிவு என்பது ஒளிப்பொருள் ஆகும் இதை ‘light of consciousness’ என்று குறிப்பிடுகின்றோம்.

இவ்விதியின் படி அறிவு நிலையில் உள்ள நிர்சலன மற்ற பொருளானது உணர்வு (அதிர்வு) பெரும்போது உயிர்கள் தோன்றின கூறப்படுகின்றது.

     இதையே சிவன் ஆதியில் ‘சிவனே’ என்று இருந்தார் என்றும் பின்பு சக்தி என்ற உணர்வில் கலந்ததால் உலகம் அல்லது இப்பிரபஞ்சம் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன.

     அதனால் தான் சிவனை பித்தன் என்றனர் பித்தன் என்றால் அறிவு (அ) ஒளிமயமானவன் என்று பொருள்.

     சக்தியை மையவள் என்று அழைத்தனர் இச்சமன்பாட்டின் விரிவை நாம் வேறு பதிப்பில் காண்போம்,

     சரி மாம்பழத்திற்கு வருவோம் அக்கதையில் சிவன் அதாவது அறிவு மயமானவன் (அ) தூய அறிவு (அ) தூய ஒளி அதனுடன் சக்தி (அதாவது) உணர்வு மயமான தூயநிலையில் உள்ள (அ) ஒலிப்பொருள் ( நம்புரிதிலுக்காக) இவை இரண்டின் சேர்கை நமக்கு ம் மகாரத்தை தரும்,

     ஆக , ம் ஆம் காய் = மாங்காய் என்றும்
     ம் ஆம் பழம் = மாம்பழம்
     (அ) ம் ஆகும் பழம் = மாம்பழம் என்று உருவானது .
ஆகையினால் குறிப்புப்பொருளாக மாங்கனியை ஞானப்பழம் என்று வைத்தனர்.

     

Comments

Anonymous said…
👍