உ
குருவே துணை
ஞானப்பழம்
-காதுகளால் மென்று
உணர்வில் செரித்தவை
ஞானப்பழம் என்ற உடன் நமக்கு திருவிளையாடல் கதை ஞாபகம் வரும், அதில்
ஒரு பழத்திற்காக சிவனின் குடும்பம் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே.
photo courtesy : http://www.templesonnet.com/ |
இதில் சிக்கல் என்னவென்றால் நாம் தலைமுறை தலைமுறையாக கிளிப்பிள்ளையாக
சொன்ன கதைகளை சொல்லும் வெறும் இயந்திரமாக்கப்பட்டோம்.
ஆனால் நம் முன்னோர்கள் ஒவ்வொரு கதையிலும் விஞ்ஞானத்தையும் பதித்து வைத்தனர்,
அது தெரியாமல் விஞ்ஞானம் நீக்கி வெறும் கதைகளை மட்டும் இப்பொழுது நடைமுறையில் உள்ளது
வேதனைக்குரியது.
இதிலிருந்து சற்று விலகி நாம் கேள்விகள் கேட்க முற்பட்டால் நம்மை நாஸ்திக
வாதி என்றும் குதற்கம் பேசுபவன் என்றும் வர்ணம் பூசிவிடுவது வேதனைக்குரியதே.
சரி இக்கதையில் நமக்கு எழும் கேள்விதான் என்ன? இக்கதையில் ஞானப்பழம்
என்று ஒரு மாம்பழத்தை குறிப்பிடுவது ஏன்?
ஏன் உண்மையில் உலகை சுற்றிவந்த முருகனுக்கு அந்த ஞானப்பழம் அளிக்கப்படவில்லை?
ஏன் விநாயகர் உலகை சுற்றுவதை விடுத்து சிவன் பார்வதியை சுற்றினார்?
இவை நம் மனதில் எழும் இயல்பான கேள்விதானே? உலகில் எவ்வளவோ பழங்கள் இருக்க ஏன் மாம்பழம்
சரி மற்றொரு புறம் காரைக்கால் அம்மையாரின் கதை மாம்பழத்தை மேலும் வலியுறுத்துகிறது,
ஏன் மாம்பழம் என்ற கேள்வி எழத்ததான் செய்கிறது.
நம் தேடுதல் மேலும் வலுவடைகின்றது ஆனால் இந்த கேள்விகளுக்கு விடை தேடுவது
எவ்வாறு?
இவ்வாறு முல்லா ஒரு Virtual Software க்கு மதிப்பீடு செய்ய சென்று இருந்தார்
அப்போது அவரிடம் இந்த Software உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் தரும் என்று கூறினார்கள்
உடனே முல்லா ஓ அப்படியா என்று ஆர்வமுடன் அதனிடம் கேள்வி கேட்டார்.
கேள்வி கேட்ட மறுகணம் அந்த Software அதிர்ந்து போனது அதற்கு விடை தெரியவில்லை.
அப்படி என்ன கேள்வி என்று முல்லாவிடம் கேட்டபோது முல்லா கூறினார் நான்
என் மனைவியின் பேச்சை நிறுத்துவது எவ்வாறு என்று கேட்டேன் என்றார்.
ஏன் இதை குறிப்பிடுகின்றேன் என்றால் நாம் இப்பொழுது எல்லாம் எந்த கேள்வியாக
இருந்தாலும் கூகுள் செய்து பார்க்க முற்படுகின்றோம் அவற்றை நம் சிந்தனைக்கு கொண்டு
வருதே இல்லை.
- பாகம் -2
- பாகம் -2
Comments