அறிவு - Arivu

அறிவு


மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.- 454


குறள் விளக்கம்
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

MEANING IN ENGLISH:
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

அறிவு என்பதை அறி+ உ என்று பிரிக்கலாம் (வியங்கோள் வினைமுற்று)
 "உ" என்ற உயிரை அறிவதே அறிவு என்று ஆகிறது.
எது உயிரை உணர்த்துவதற்கு உதவுகின்றதோ அது அறிவு பொருள் ஆகிறது. 
அறிவு நிலைகள் பத்து அவற்றை இங்கு காண்போம்.

உணர்வு என்பது உணர் + உ ; ஆக உயிரை உணர் , எது உயிரை உனக்க்கு உணர்த்துகின்றதோ அதுவே உணர்வு.


உணர்ச்சி என்பது உணர் + சி ; ஆக "சி" யை (நாய் ஓட்டு மந்திரம்) உணர், எது சிவத்தை உனக்க்கு உணர்த்துகின்றதோ அதுவே உணர்ச்சி


நாய் ஓட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாய் ஓட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாய் ஓட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாய் ஓட்டு மந்திரம் நாமறியோம் அன்றே.

- ஒன்பதாம் தந்திரம் (திருமந்திரம்)



Comments