சரணே !

இன்புறும் அருள் ஒளி தந்து
துன்புறும் இருள் தன்னை ஒழித்து
பண்புறும் பனிவினை தாறும்
அன்புறும் ஐகரந் சரணே !

பிறந்தேன் இறந்தேன் இறந்தேன் பிறந்தேன்
இன்னும் எத்தனை முறை இவ்வாறே செய்வேன்
உன் இருபொர்பாதம் பணிந்தும் இவ் எளியேனை
ஆட்கொள்ளாமல் இருப்பது தான் தகுமோ!

இயல்பினை இழந்தேன் பின் இயல்பினை பெற்றேன்
பெற்ற ஒரு வழி அடைத்து ஒன்பது வழி கொடுத்தாய்
இரு விழி கொண்டும் அவ் வழி திறக்க ! உன்
அருள் வழி அறியா அன்பிலாதவனாய் இருந்த என்னை
பண்புடன் அன்புடன் அனைத்தீர் அய்யா நின் கருணை என்என்று சொல்வேன்!


உன் அருள் வழி கண்ட என்னை இப் பொருள் வழி மாயை என்ன செய்யும்
செயலும் செயல் அதின் பொருளும் அப் பொருள் அதின் இயக்கமும்
கருதும் கருத்ததின் காரணமும் காரணத்தின் நாயகனும்
மனமும் மனமதின் எண்ணமும் அவ் எண்ணத்தின் விளைவுமாய் அருளும்
அய்யனே உன்னை அடைந்து உணரும் காலம் எதுவோ


எனக்கு என்று ஒன்றும் இல்லை என்று
இருந்த என்னைஉனக்கு என்று உரிமை வைத்தாய் !
அய்யா மனத்தின் பின் பிணத்தின் வழி செல்லாது
என்னை உணர்த்தி உன் உணர்வின் வழி செலுத்தும் நாதா
உன் கருணை என் சொல்வேன்

Comments