ஸ்ரீ சிதம்பரம் சிவா சுவாமிகள்



குருவே துணை

சிவம் சிவா எனப் பெயர் பெற்று
சிவமயமாய் ஒளிர் விடும் நாதன் காட்சி!

அன்பே அவன் உரு
அன்பே அவன் அருள்
அன்பே அருள் வழி
அன்பே அவன் செயல்
அன்பே பரமன் நடனம்
அன்பே அவனாய் ஆகும் வழி !
-என்று உரைத்த  ஓம் ஸ்ரீ சிதம்பரம் சிவா சுவாமிகள்


சிவ என்பது ஆண்பால். சிவா, சிவை என்பன பெண்பால். மனிதனின் உள் இருக்கும் சடமய ( உறங்கிக்கொண்டு) இருக்கும் சக்தியை விழிக்க செய்வது சித்துருவான "சிவா" ஆகும். இதனை திருமூல பெருமான் விளக்குகின்றார்

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்
சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்
வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. - திருமந்திரம் -2703


அதனால் " சிவாயநம " என ஓதில் சடமயத்தில் உள்ள நமசிவாய விழித்தெழ செய்து மேல் நோக்கும் என்பதை உணர்த்த செயு று கண்ணி அஞ்செழுத்து என்று கூறுகின்றார். (வாயுறு - பிறர் காதிற்கு கேட்க்காமல் )

Ref - திருமந்திரம் - உரை - G.வரதராஜன்

Comments