குருவே துணை
மனம் !
------------
மனம் என்னும் மாயை தான் மர்மம் கேளு ! அதை
நிலை எனவே நித்தம் நித்தம் நினைக்க தோணும்!
நிலையில்லா எண்ணம் இதை நீக்க எண்ணி
நித்தம் நித்தம் நினைவிதிலே வீழுவான்பரே!
முடிவில்லா முயற்சியத்தை மூடன் செய்தே
முடங்கி தான் போவான் அவன் மண்ணில் பா ரே!
தந்திரம் தான் என் நாதன் சொல்லக் கேட்டு
தள்ளி நின்றேன் தந்திரமாய் நாதன் பக்கம்
மந்திரமோ மனம்தான் அதை மறை யக்கண்டேன்
மோனநிலை முடிவில்லா தானாய் நின்றேன்
என் நாதன் நடனம் மதின் அர்த்தம் கற்றேன்
எல்லை இல்லா பார வெளிக்குள் பயணம் செய்தேன்!
பாங்காக எட்டு இரண்டும் கூட்டு என்றான்
யகரம் அதில் அழுத்தி அழுத்தி நில்லு என்றான்
என் நாதன் வார்த்தை தனை உயர்வாய் செய்தேன்
கள்ளன் எனும் காமனையும் வென்றேன் வென்றேன்
கறை இல்லா ஒளி தன்னை கொடுத்தே என்னை !
கவலை இல்லை கவலை இல்லை என்றே நின்றான்
என் சொல்வேன் என் நாதன் கருணை தானே
ஓ கருணைததனை சொல்வதறிய முட்டாள் நானே !!
-சிவ பித்தன்
Comments