என்சொல்வேன் என் நாதன் கருணை தானே !

குருவே துணை


வாசி.
------------

வாசி எனும் வகை அறியா மூடன் பாரு
விதி என்றே வீதி தனில் அலைவான் பாரே
மதி எனும் சர மாம் அது சந்திர ஓட்டம் .!
மர்மம் அதை நாதன் தான் கூற கேட்டேன்

வகையாக சரம் மாம் அதை சார்த்தே நின்றேன்
விதி என்னும் வீண் பேச்சு மறைந்தே போச்சு
அவன் அருள் என்னும் ஒளி வெள்ளம் என்னை அடித்தே போச்சு
என்சொல்வேன் என் நாதன் கருணை தானே !
அவன் கருணைதனை சொல்வதறிய முட்டாள் நானே.

-சிவ பித்தன்


------------------

கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்?
கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?
எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?
தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!

-நெஞ்சறி விளக்கம்


Comments