குருவே துணை
அசபை - என் நாதன் நடனம்
--------------------------------------------------------
அசபையாம் மௌன மொழி பேசாக்கறேன்
அன்புவழி ஐயனையும் கண்டேன் கண்டேன்!
அடைத்திட் டே இருசெவியும் கொள்ளா நாதம்
அச்சச்சோ என் சொல்வேன் நாதம் நாதம்!
எல்லையில்லா மோனநிலை தந்தே என்னை
எண்ணமெல்லாம் கரைத்திட் டான் என் நாதன் நாதன்!
சித்தம் எனும் பித்தம் தான் தெளிந்தே போச்சு
சிந்தனையும் செயலும் அது சிவமாய் ஆச்சு
அச்சச்சோ அவனில்லா அணுவும் இல்லை
அண்டம் எல்லாம் அவன்தானே பரந்தே நின்றான்
எல்லை இல்லா அவன் கருணை கடல் போல் தானே
என்சொல்வேன் என் நாதன் கருணை தானே
-சிவ பித்தன்
Comments