Siva Taṉittaṉmai viḷakkum muṟai -தனித்தன்மை விளக்கும் முறை


சிவா நம் கேள்விகளுக்கு பதில் , தனித்தன்மை விளக்கும் முறை.

சிவா உடன் இருந்து பயணித்த ஒவ்வொரு நாளும் நமக்கு நம்மை இன்னும் ஆழமாக நம்முள் உணர்ந்து பயணிக்கும் நாட்களாகவே அமைந்திருந்தன.

கோயில் சுவரில் இருந்து சரிந்த நிலையில் இருக்கும் சிறிய கீற்று சாற்று கொட்டகை, சிறிது உயர் உட்காரும் மேடை, கழி மற்றும் கருங்கல் கொண்டு அவ்கட்டு மேடை இருக்கும் அதன் மேல் பல அடுக்கு அட்டை. ஒரு புறம் மட்டுமே அடைப்பு , பின்புறம் திருக்கயிலாய ,தக்ஷிணாமூர்த்தி படம் மறுபுறம் அமர்த்த நிலையில் சிவன் உருவம் , மற்றோரு புறம் நடராஜர் மற்றும் விநாயகர் படங்கள் என , ஒரு சிறிய எளிமையான இடம் அதுவே சிவாவின் தங்குமிடத்தின் அமைப்பு. 

அங்கு வரும் ஒவ்வொரு அன்பரும் பல்வேறு கேள்விகளை சுமந்து அதற்க்கு தெளிவு வேண்டி வருவதுண்டு.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.1

என்ற திருமந்திரத்துக்கு இணையாக அங்கே சிவாவின் சீரிய அன்பு பார்வையும் அழுக்கற்ற குழந்தைத்தனமான சிரிப்பும் வெண்ணிற தாடியும் அன்பு ததும்பும் அக்கறையும் கண்டவுடன் இருக்கும் அவரை அணுகிய உடன்  தத்தம் கேள்விகளை மறந்து சிவாவுடன் லயித்து இருப்பதுண்டு.

கேள்விகள் என்றும் முடிவில்லாதது , 

மனதின் விளைவாய் உருவாகும் கேள்விகள் எப்பொழுதும் மற்றோரு கேள்வியை நோக்கியே இருக்கும் அதன் பதில் அல்லது விளக்கம் பற்றிய கவலை அதற்க்கு இருப்பதில்லை. அவை மனதின் சூழ்ச்சியின் கட்டமைப்பு. அனால் நம் ஆன்மாவில் இருந்து எழும்பும் கேள்விகள் ஞானத்தின் ஒளியால் அக்கணமே விலகிவிடும். இருட்டை எவ்வாறு  அகற்ற முடியாதோ அவ்வாறே மனதின் கேள்விகளையும் அகற்ற முடியாதவை, அவை ஞானம் என்ற ஒளி ஏற்பட்ட அக்கணமே இருள் என்பது இல்லாமல் போய்விடுகின்றது. இது எவ்வாறாக இருப்பினும் தன்னை நாடி வரும் ஆன்மாவின் அங்ஞானத்தை விளக்க சிவா கையாளும் விதமே தனி.


நான் ஒவ்வுறுமுறையும் ஏதேனும் ஞானிகளின் புத்தகம் அல்லது சித்தர்களின் புத்தகங்கள் வாங்கி அதை சிவாவிடம் காட்டி பின்பு படிப்பதுண்டு. அவ்வாறு புத்தகங்களை தன்கையில் வாங்கி ஏதேனும் ஒரு பக்கத்தை பிரித்து அதை அங்கு கேள்வியுடன் வந்த அன்பரை படிக்க சொல்வார். அவர் தன் கேள்விக்கான பதில் அதில் அடங்கி இருப்பது உணராமல் படித்தால் அதை திரும்ப படியுங்கள் என்பார். அவர்கள் அப்பதிலை உணர்த்த மாத்திரத்தில் அவைகளை பார்த்து ஓர் ஆனந்த புண்ணுருவல் செய்வார். இது பலமுறை வெவேறு அன்பர்களுக்கு நிகழ்த்த அனுபவம்.

அவற்றில் திருமந்திரம், திருவருட்பா போன்ற புத்தகங்களை மிகுந்த அனந்தத்துடன் அனுபவித்து ரசித்து படிப்பது அவரின் குணமாகவே இருந்தது.


சிவாவும் நானும் - புத்தக தொகுப்பிலிருந்து 



Comments

varunsivapithan said…
சிவாவின் கருணை தனித்துவமானது