Sivaa- சிவா - வாசி யோகியின் வாழ்க்கை குறிப்பு


திருச்சிற்றம்பலம் 
குருவே துணை 


கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்

மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்

குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்

மறித்துப் பிறவியில் வந்து அணுகானே. 

                                               - திருமந்திரம் 


  • கருமைநிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன்னாகும். அங்ஙனம் செம்பொன்னானபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகைபோன்று செவ்விவாய்ந்தபொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக் குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப்பெருங்கடலில் வந்து பொருந்தான்.

ங்குமாம் வியாபித்திருக்கும் கருணை மேகம் அவ்வப்போது அருள் என்னும் மழையை பொழியுமாம் இதற்க்கு சத்திநிபாதம் என்றும் கூறுவதுண்டு.

அவ்வாறு இங்கு கருணை என்கின்ற மேகம் அருள் என்கின்ற மழையை பொழியப்போகின்றது என்பதை நாம் உணர்த்துவதற்காக அங்கு ஞானிகளோ (அ ) சித்தர்களோ, தோன்றி அவர்கள் மூலமாக அந்த கருணை என்கின்ற அருள் பிரவாகத்தை நிகழ்த்துமாம்.அவ்வாறான ஞானியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் நாம் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் க்ஷண நேரத்தில் விலகிடும் என்று பெரியோர்கள் கூறுவார்கள் .

ஆனால் அவ்வாறான ஒரு ஞானியை நாம்மால் கண்டுகொள்வது அவ்வளவு எளிதல்ல. எவ்வாறு தூக்கத்தில் இருக்கும் ஒருவன் விழிப்பு நிலையில் உள்ள ஒருவரைக் காண முடியாதோ அவ்வாறு அஞ்ஞானம் என்னும் தூக்கத்தில் இருக்கும் நம்மால் எப்பொழுதும் விழிப்புநிலையில் இருக்கும் ஞானியை கண்டுகொள்ளமுடியாது.

"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி 

என்பது போல அவ்ஞானிகளே தங்களை வெளிப்படுத்தி நம்மை ஆட்க்கொண்டாள் தவிர நம்மால் உணர்வது கடினம்

அவ்வாறு ஒருவாறு நாம் உணர்த்தபோதும் அவர்களின் செயல்களும் கூற்றும் நமக்கு புரிவது என்பது கடினம். இது ஞானிகளுக்கே உண்டான இயல்பு.


இருப்பினும் இதிலிருந்து வேறுபட்டு அவ்வப்போது ஞானிகளும் மகன்களும் இங்கு தோன்றுவது உண்டு குறிப்பாக மகான் ரமணா மகரிஷி ,பகவான் ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் அருட்ப்ரகாச வள்ளலார் போன்றோர் எளிமையே வடிவமாக கடை எளிவனுக்கும் இந்த மெய்ஞ்ஞானம் சேரவேண்டும் என்ற நல்முயற்சியுடன் தோன்றி அவ் அருள் பிரவாகத்தை நமக்கு வழங்கி சென்றுள்ளார்கள் இவ்வாறு இந்த  வாழையடி வாழை என வந்த  திருக்கூட்ட மரபில் நமக்கு வழிகாட்ட வந்தவர் சிதம்பரம் ஸ்ரீ சிவா ஸ்வாமிகள்.அவரது வாழ்வில் சில குறிப்புகளை இங்கே தொகுத்து அவன் அருளாலே முற்படுகின்றோம்.


அருள் நடை பழகுதல் -பிள்ளை பருவம் 

சுரண்டை எனும் சிற்றூஊரில் அவதரித்து கணபதி  என்ற நாமத்துடன் (பூர்வாச்ரம நாமம் ) மிகுந்த துடுக்கும் விளையாட்டும் உள்ள சிறுவனாக அவதரித்தார். சிறுபிள்ளை விளையாட்டின் போது சன்னல் கம்பிகளில் தனது வலது கை முறிந்திட அது பின்பு இணையாமல் போக தன் வலது கரத்தை இழக்கிறார் கணபதி.தன் சிறுவயதிலேயே வலது கையை இழந்தும் தன் பின்னதை  ஒருபோதும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்வை கடந்தார். 

அங்கு வளர்த்து வந்த இளம் தருணத்தில் கடவுள் பக்தியும் ஒழுக்கமும் நிறைவாக பெற்று சுரண்டை ஸ்ரீ பிரம்மநாயகம் எனும் ஞானிக்கு பணிவிடைகள் செய்து , பிரம்மநாயகம் ஸ்வாமிகளின் வழிகாட்டுதலுக்கு அன்பிற்கும் தன்னை பாத்திரம் ஆக்கி கொண்டவர். 

அவ்வாறு பணிவிடை செய்யும் காலத்தில் பிரம்மநாயகம் ஞானிகள் அவருக்கு உபதேசமும் நிஷ்ட்டையும் கூட்டி பழக்கச்செய்தார். 

தனக்கு கிடைத்த நேரங்களில் கணபதி தவறாது தீவிர அருட் பசியுடன் தவம் புரிந்ததாக பிரம்மநாயகம் ஸ்வாமிகள் கூறுவதுண்டு.



பிரபஞ்சத்தின் விளையாட்டு - குடும்பம்
காலங்கள் ஓட தான் இல்லறம் புகுந்து ,அவ் ஊரிலேயே துணி வியாபாரம் செய்துவந்தார். நன்கு செழிப்புடன் இருந்த காலங்களில் குழந்தை செல்வங்களுடன் காலம் புரண்டது.
காலத்தின் கட்டாயம் தன் ஊரைவிட்டு பலஊர்கள் பெயர்ந்து பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் அடைத்தார் . குடும்பம் வறுமையை வருடியது. அது ஊர் எங்கும் வறட்சி காலம். லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து குடும்பம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். 
குடும்பம் அடையும் துயரம் கண்டு மனம் வேதனையற்றார் இதிலிருந்து தன்குடும்பத்தை காப்பாற்ற வழிதேடி அலைந்தார். இவ்வாறு தன் தேடுதலில் ஜோசியக்காரன் வழிபட அவன் கூறிய வார்த்தைகள் அவரை அதிரவைத்தன. கணபதியின் ஜாதகம் ஒரு சன்யாசி ஜாதகம்  அவர் குடும்பத்தை விட்டு பிரிவதுதான் இதற்க்கு தீர்வு என்றும் கூறிச்சென்றான் இதை தன் துணையிடம் தெரிவித்து விடைபெறும் முடிவிற்கு வருகின்றார் கணபதி.

அருள் விளையாட்டு - பரிவ்ராஜகம் 
தனது 35ஆவது வயதில் பரிவ்ராஜக வாழ்க்கையை துடங்கி ஊரூராக பயணம் செய்தார் .நினைக்கும் இடத்தில் ரயிலில் இருந்து இறங்கி ஆவூரில் உள்ள ஆலய தரிசனம் செய்து பின் அடுத்து என தன் ஆன்மீக பயணமாக காலம் தொடர்ந்தது. காசி முதல் பல ஸ்தலங்களுக்கு தான் சென்று அங்கு தங்கி அங்கு கிடைக்கும் யாசகத்தை வைத்து வாழ்ந்து வந்தார். அவ்வாறு இருந்த காலத்தில் தனக்கு எல்லாம் இறைவன் அருளுவதை அவர் உணர்ந்து வந்தார். சில நேரங்களில் இவரிடம் இருந்து அனைத்தையும் திருடர்கள் திருடிச் செல்வதும் உண்டு. அவற்றை பொருட்படுத்தாமல் தான் அடுத்த ஊர் என புறப்படுவார்.

அகத்தியர் போன்ற சிறிய உருவம் தீக்ஷண்யமான கண்கள் ,நீண்ட தாடி ,கருத்த சடை என அனைவரையும் அன்பின் வழி ஈர்க்கும் காரணத்தால் அனைவரும் அவரை சிவா என அழைக்கலானார். அதை தன் தீக்ஷை நாமமாக ஏற்றுக்கொண்டார் சிவா.

அருள் நிஷ்ட்டை  - மௌனத்தின் வெற்றி 

பரிவ்ராஜக பயணம் முடித்து தன் தவ வாழ்க்கைக்கு விழைகிறார் சிவா. சிலகாலம் பெரம்பலூர் எனும் ஊரில் ஓர் அன்பரின் வயல் பம்பு செட் கொட்டகையில் தங்கியிருந்து தன் தவத்தை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பெரும் உதவியாக அவ்ஊர் அன்பர்கள் துணைபுரிய அங்கேயே சிறிது காலம் தங்கலானார். 
சுரண்டை ஸ்ரீ பிரம்ம நாயகம் சுவாமிகள்

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை மாநகரில் தெய்வாம்சமாக அவதரித்தார் ஸ்ரீ பிரம்ம நாயகம் சுவாமிகள் தமது இளம் வயது முதல் தெய்வீக ஞானம் கைவரப் பெற்றிருந்தவராகவும், பிரம்மநாயகம் என்ற நாமம் பெற்றிருந்த சுவாமிகள் அப்போதைய மகான்கள், சந்தியாசிகள் சகவாசம் தொண்டு ஆற்றி வந்தார் திருச்செந்தூர் முருகன் மேல் மிகுந்த பக்தி கொண்டவராய், கடும் விரதங்கள் பூண்டு ஒரு நாள் திருச்செந்தூர் நடைபயணமாய் சென்று கோவில் நுழைவு வாயில் செல்லும்போது அங்கு வாசவில் நின்ற அதிகாரி வேறு காரணம் சொல்லி இப்போது சாமி தரிசனம் செய்ய இயலாது என்று தடுத்து நிறுத்திய போது சுவாமிகள் மனம் வருந்து வெளி மண்டபத்தில் அமர்ந்திருக்க ஒரு இளம் வயது பாலகன் வந்து அப்பா நீ முருகனைப் பார்க்க வேண்டுமா? என்னோடு வா முருகனை தரிசிக்க செய்கிறேன். என்று கோவிலுக்குள் கூட்டிச் சென்றார். சுவாமிகள் முருகனை மெய்மறந்து தரிசித்தி முடித்து கூட்டி வந்த பாலகன் காணாமல் போகவே சுவாமிகள் தனக்கு பாலகன் வடிவில் முருகனே காட்சிதந்து அருள் புரிந்ததை எண்ணி மகிழ்ந்தார். முருகனின் இந்த கருணையை நினைத்து மனம் வரும்பபோதே மேலும் ஒரு அதிசியம் தான் பசியோடு அமர்ந்திருக்கும் போது ஒரு பெரியவர் வந்து ஆச்சாரமாக அழைத்து சென்று உணவு கொடுத்து உபசரித்ததையும் முருகனின் கருணை என்று வியந்தார். இப்படியாக முருகனின் கருணையை நினைத்து மெய்மறந்து இருக்கும்போது முருகனே தான் அநுபூதி வடிவமாக வந்து ரகசிய பஞ்சாட்சர உபதேசத்தை உள்ளத்திலே உயர்த்தி, தான் சிவனாகவும், விஷ்ணுவாகவும் ஆத்மார்த்தமாக காட்சி தந்ததாகவும் சுவாமிகள் மனம் உரு கூறுவார்கள்.

          இவ்வாறு தன் குருநாதருக்கு முருகன் காட்சி கொடுத்த ஊரான மேலும் ஜயந்திபுரம், திருச்சீரலைவாய் என்றெல்லாம் புராணங்கள் போற்றும் திருச்சந்தூருக்கு சென்று அங்கு 18 மாதங்கள் மோன நிஷ்டையுடன் வள்ளி குகையில் தங்கி தவம் மேற்கொண்டார் . அவர் தங்கியிருந்த காலங்களில் பால்கோவா அய்யர் எனும் முருகன் உபாசகர் அவருக்கு பெரும் உதவிகள் செய்துவந்தார்.அது தொடர்ந்து தான் சஷ்டி விருத்தம் 6 நாட்கள் உபவாசத்துடன் மவுனத்தினையும் கடைபிடித்து தவம் மேற்கொள்வார்.


மந்திர வார்த்தை - இனி இங்கேயே இரு 


5 ஆண்டு பரிவ்ராஜகராக திரிந்த சிவா , சிதம்பரம் ஆடல்வல்லான் சிற்றம்பல தரிசனம் செய்து ஆனந்தத்துடன் அடுத்த ஊர் என புறப்பட்ட அவருக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. தான் வழக்கம்  போல அடுத்த ஊர் செல்ல சிதம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்பொழுது ஆஜானு உருவம் அந்தணர் உருவில் அவர் எதிர்ப்பட்டு எங்கே போறீர்கள் என்று மிரட்டிய குரலில் கேட்டு இனி எங்கும் போகவேண்டாம் "இனி இங்கேயே இரு" என்று ஒலித்து மறைந்தார் .

என்னையும் இருப்பதாக்கினன் - திருவண்டப்பகுதி(திருவாசகம்)

குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
இருஎன்ற தனிஅகவல் - ஆளுடைய அடிகள் அருண்மாலை ( வள்ளலார்) 
இரு என்ற மந்திர வார்த்தை சிவாவை சிதம்பரத்திலேயே இருத்தி வைத்தது. தான் மந்திர சொல்லிற்கு கட்டுண்டு சிதம்பரம் ஊரில் நுழைய அவரை தில்லைவாழ்  அந்தணர்கள் ஆதரித்துவர. சிதம்பரம் தெற்கு கோபுர வாயிலில் தங்கி நீர்மோர் மற்றும் சிவ கைங்கர்யம் புரிந்து வந்தார்.


வாசியோகம் - வாலை சித்து 
தான் பரிவ்ராகஜராக இருந்த காலத்தில் அவருக்கு ஸ்ரீ கடப்பை ஸச்சிதானந்தரின் வாசியோக பயிற்சி கைவரப்பெற்றும் மேலும் வாலை உபாசனை ஒருநாளும் விடாது தொடர்ந்து புரிந்து வந்தார் 

இதன் வாயிலாக தெற்கு கோபுர வாயிலுக்கு வரும் அன்பர்களுக்கு முடிக்கயிறு கொடுப்பதும் விபூதி மந்திரித்து அவர்களது பிணி அகற்றுவதும் செய்து வந்தார்.
அத் தருணத்தில் ஜாதி மத வேறுபாடுன்றி அனைவரும் சிவாவிடம் அருள் பெற்று அவர்கள் பிணி அகன்றனர்.
தான் தில்லையில் தங்கியிருந்த 40 ஆண்டு கால தொண்டில் அவர் பல்வேறு அருள்ஆடல் செய்து அங்கு வரும் எளியவருக்கும் ஆடல்வல்லானின் அருட்தாகத்தையூட்டி. தன் எளிமையின் வடிவாய் அன்பின் உருவாய் அனைவரின் உள்ளத்தையும் எளிதில் ஆட்கொள்வார்.


அருள் ஆட்கொள்ளுதல் - அன்பின் அணைப்பு 
சிவா தனது கடைசி காலங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அப்பொழுது அங்கு அற்புதங்கள் புரிந்து தான் செயற்கை சுவாச நிலையில் இருந்து வெளிவந்தார். அன்று தை அம்மாவாசை முன்னாள் தன் முக்திநிலை அறிந்து மாலை அங்கேயே யோக நிஷ்டையில் அமர்ந்தார் . மருத்துவர்கள் அவரை பரிசோதித்து இது அவர்களுக்கு புலப்படாத நிலை என அறிவித்தனர். கண்கள் மேலநோக்கியவாறு வாசியை சீராக்கி அமைந்த நிலையில் தை அம்மாவாசை தினம் 
(7 பிப்ரவரி 2008 )  அதிகாலை 5:22 மணித்துளிக்கு தன் சரீரத்தை விடுத்தது ஜீவன்முக்தி அடைத்தார். அவரது அதிஷ்டானம் சிவபுரியில்  ( சிதம்பரத்தில் இருந்து 5 km தொலைவில் ) அமையப்பெற்று அங்கு வரும் அன்பர்களுக்கு இன்றும் அருள்பலித்து வருகின்றார்.



Comments