கண்ணாடி தவம் -காட்சியின் தெளிவு -பகுதி II

கண்ணாடியின் அளவீடும் அதன் அடிப்படையும் 

நாம் கண்ணாடி தவத்திற்கு கண்ணாடியின் தடிமன் குறைந்தது 5-6mm கொண்டதாவும் , அதில் பாதரச பூச்சு தடித்து பூசப்பட்டதாகவும் இருத்தல் அவசியம். 3அடி தொலைவில் நமது முழு உருவம் அமர்ந்த நிலையில் தெரியும் அளவு கண்ணாடி இருத்தல் வேண்டும்.
அடிப்படை விஞ்ஞானம் 
ஒளிவிலகல் குறியீடு என்று அழைக்கப்படும் (refractive index) n = 1 to 1.3 ஆனால் பாதரச பூச்சுக்கொண்ட கண்ணாடிகள் அதிக ஒளிவிலக்கல் கொண்டதாக இருக்கும் ,பாதரச ஒளிவிலக்கல் 1.7442. ஒளிவிலக்கல் சமன்பாட்டின்படி ஒளிவிலக்கல் அதிகமாக அதிகமாக ,ஒளியின் வேகம் குறையும்.

refractive index    
where c is the speed of light in vacuum and v is the phase velocity of light in the medium ( Fresnel_equations ) 





இதன்படி , நமது மனம் ஒன்றை பற்றி புலன்களின் வழியே நம்மை அடையும் நேரம் η என்று வைத்துக்கொள்வோம். இதில் கண்ணாடியில் ஒளிவிலக்கல் காரணமாக ஒளியின் வேகம் τ  என்று கொண்டால் 
 நம் மனம் ஒடுங்கிய நிலையில் அந்த கண்ணாடியில் நமது உருவம் தென்படாத நேரம் 
☿ = η - τ 

ஒளியின் வேகத்திலேயே மனமும் பயணிப்பதாக வைத்துக்கொள்வோம்,( மனம் ஒளியின் வேகத்தை விட அதிக வேகம் பயணிக்கும் தன்மை கொண்டவை)

அதாவது, நமது மனம் ஒரு பொருளை கண்களின் வழியாக சென்று பற்றி பின்பு அந்த பொருளாக ( கண்ணாடியில் தெரியும் உருவம் நாம் என்று மனம் விழைவது) மற்றம் அடையும், இது முதல் முறை மற்றம் அடைத்த பின்பு நமது மனம் மீண்டும் அதை முழுவதுமாக பற்றுவது இல்லை அதற்க்கு பதிலாக முன்பு பற்றிய உருவத்திற்கும் இப்பொழுது உள்ள உருவத்திற்கும் உள்ள வேறுபாட்டை ( corrective difference) மட்டும் சமிக்கை செய்யும். 
அதனால் தான் அசைவு இல்லாமல் நம் உருவத்தை பார்க்க வேண்டும் அப்பொழுது மனம் தனது இரண்டு சமிக்கைக்கு இடையில் எந்த வித மாற்றம் இல்லை என்பதுடன் நமது உருவம் காண்ணாடியில் பட்டு பிரிதிபலிக்கும் நேரம் நீட்சி அடைவதாலும் நமக்கு ஒரு வெறுமை இடைவெளி கிடைக்கும். இந்த இடைவெளி நமது உருவம் கண்ணாடியில் தோன்றாத படி செய்விக்கும். இதை நேரத்தில் நமது சித்தத்தில் உள்ள கட்சி தெரிவதும் இயலபு.


மஹாபாரதத்தில் ஓர் நிகழ்வு 

மஹாபாரதத்தில் ஓர் நிகழ்வு குறிப்பிட படுகின்றது , ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணர் தனது சகோதரர் பலராமரை பார்க்க செல்லும்போது இந்திரப்ரஸ்தத்தில் (இப்பொழுதைய டில்லி )  இருந்து வந்ததாக சில அறிய பொருட்களை கொண்டுவருவார் , அதில் ப்ரியஷர்ஷனி என்னும் ஒரு மாயக்கண்ணாடி கொண்டுவருவார் , அது பார்ப்பவரின் மனதில் விருப்பமானவர்கள் உருவத்தை கண்ணாடியில் காட்டும் எனப்பட்டது.

இது எதோ கதை  போல இருந்தாலும் இவ்வாறு ஒரு கருவி உருவாக்குவது 100 சதவீதம் சாத்தியமே. நாம் "Mind Finder" என்ற கருவி உருவாக்கியதுப்போல இது பார்ப்பவரின் மனதை சிறிது நேரம் பிடித்து வைத்து காட்டும் தன்மையில் ஒரு கருவி உருவாக்கமுடியம். 

எந்த பயிற்சியாயினும் நம்மை அதில் வெற்றிபெற செய்வது குரு பக்தியும் ஜீவகாருண்யமும் மட்டுமே ஆகும்.

திருச்சிற்றம்பலம் 

Comments