கண்ணாடி தவம் -காட்சியின் தெளிவு -பகுதி I

கண்ணாடி தவம் - காட்சியின் தெளிவு! அறிவியல் அலசல் பகுதி I

"கடை வழி ஃ வாசல்"  என்ற 
சிவபித்தன் புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள் .....
கடை வழி ஃ வாசல்
கடை வழி ஃ வாசல்

நமக்கு சிவா குருபூஜை சத்சங்கத்தின் போது வாசியோக பயிற்சியின் அடைப்படை என்று அவற்றில் விளக்குத்தவம், புருவமத்திதவம் மற்றும் கண்ணாடித்தவம் பயிற்சிகள் தரப்பட்டன,  இதில் கண்ணடித்தவம் மிகவும் எளிமை மற்றும் சக்திவாந்த பயிற்சியாக இருந்தாலும் அதில் பெரும்பாலும் பயிற்சியாளர்கள் தவ வெற்றியின் எல்லையை அடைவதில்லை. இதற்க்கு  கண்ணாடி தவத்தின் அடிப்படையை புரிந்திருக்காததே என்று தோன்றுகின்றது.
நாம் இதன் அடிப்படையை புரிந்துகொள்ளாமல் வெறுமனே கண்ணாடியை எத்துணை நாட்கள் முறைத்து பார்த்தாலும் அதில் வெற்றி காண்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.
அப்படியானால் கண்ணாடி தவத்தின் முறை என்ன ? அவற்றின் அடைப்படை என்ன ? இவற்றை நாம் தெரிந்து தெளியுற குருநாதரின் துணை கொண்டு இதனுள் நுழைவோம்.

கண்ணடி தவத்தின் வெற்றி இரண்டு வழிகளில் பார்க்கப்படுகின்றது 1. தவ பயிற்சியாளர் தன் உருவம் கண்ணாடியில் தோன்றாத நிலையை காணுதல், பெரும்பாலான தவசிகளுக்கு இந்த காட்சி அடிப்படையாக கிடைக்கும் 2. தவ பயிற்சியாளர் தன் சித்தத்தில் உள்ள உருவம் கண்ணாடியில் தெரிவதை பார்த்தால் , அதாவது பயிற்சியாளர் தன் இஷ்ட்ட தெய்வத்தை தனது சித்தத்தில் நன்கு பதிந்திருந்தால் மனம் அற்ற நிலையில் கண்ணாடி சித்தத்தில் உள்ளதை பிரதிபலிக்கும். 


கண்ணாடி அடைப்படை என்ன ? 
அடிப்படையில் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டு வகைப்படும். 
மேல்பூச்சு கண்ணாடிகள்(first surface mirror)  , பின் பூச்சு கண்ணாடிகள்  ( second surface mirror) , இதில் மேல்பூச்சு கண்ணாடிகள் பெரும்பாலும் நமது பயன்பாட்டில் இருப்பதில்லை இவை 
https://en.wikipedia.org/wiki/First_surface_mirror
அறிவியல் சாதனங்களுக்கும் நுண்ணிய செயல்களுக்கும் பயன்படுத்த பெறுகின்றன (உதாரணமாக பார்க்கோடு ஸ்கேனர் ) 

பின்பூச்சு கண்ணாடிகள் 
இவை நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் ஆகும். அதாவது கண்ணாடியின் பின்புறம் பாதரச ஈயம் கலந்த பூச்சு உள்ளதாக இருக்கும். ( ஆனால் 20 நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து இவ்வாறு பாதரசம் பூசப்பட்ட கண்ணாடிகள் நடைமுறையில் இல்லை அதற்க்கு பதிலாக silverline சில்வேர்லின் பூச்சி உள்ளவை தான் அதிகம் இருக்கின்றன ) ஏன் இவ் பாதரச பின் பூச்சு உள்ள கண்ணாடிகள் என்று குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு .

மனம் செயல்படும் விதம் 

நம் மனம் கண்களின் வழியாக தான் மற்ற புலன்களை விட மிக அதிகமாக செயல் படும் மற்றும் கிரகிக்கவும் செய்யும். இதில் உதாரணமாக நாம் ஒரு மரத்தை பார்ப்பதாக வைத்துக்கொள்வோம் , நாம் மரத்தை பார்த்த கணத்தில் நம் மனமானது கண் புலனின் வழியாக சென்று மரத்தின் மீது படிந்து நமது மனம் மரமாக உருவெடுக்கும். பின்பு நம் புலன்களின் வழியாக அவை நம்மை வந்து அடையும் இவை அனைத்தும் கணப்பொழுதில் நிறைவேறிவிடுகின்றன.அதாவது நாம் பார்ப்பது அனைத்துமே நம் புலன்களின் வழியாக நம் மனம் சென்று உருமாறிய நிலையை மட்டுமே இதைத்தான் ஞானிகள் புலன்களின் காட்சிகள் மாயை என்று குறிப்பிட்டனர். ( Look at the tree in front of you. Are you actually looking at the tree or is thought looking at it?-  Jkrishnamurti.) 

அப்படியானால் நாம் பார்ப்பது அனைத்தும் மனதின் வெளிப்பாடா ?
ஆம் நாம் புலன்களின் வழியாக கிரகிக்கும் அனைத்துமே மனதின் பதிவுகள் தான், இதை அறிவியலும் ஒருவாறு ஒத்துக்கொள்கிறது. அதாவது நமது கண்களின் ஒளி கோணத்தை ஆராயும் பொது அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது, நமது கண் 120 கோணம் மட்டுமே பார்க்கும் திறன் கொண்டவை  ஆனால் 180 கோணம் உள்ள காட்சிகள் நமக்கு தெரிவது போல நமது மனம் காட்சி படுத்துகின்றது.
இன்னும் இதை நீங்கள் முழுமையாக நம்பவில்லையா ? இதோ இந்த படத்தை  "+ "கவனியுங்கள் ...



கண்ணாடியின் தடிமன் மற்றும் அதன் பூச்சின் தன்மை ,அவற்றின் அறிவியல் விளக்கங்களை பகுதி II ல் தொடர்வோம் 

Comments

Venkatesh said…
இதன் இரண்டாம் பாகம் எங்கு உள்ளது?!
இதன் இரண்டாம் பாகம் எங்கு உள்ளது?!