அண்ட உச்சி

"கடை வழி ஃ வாசல்"  என்ற 
சிவபித்தன் புத்தகத்தில் "அண்ட உச்சி " என்ற பகுதில் இருந்து சில குறிப்புகள் ...

அண்ட உச்சி
"அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கும் , 
பிண்டத்தில் இருப்பது அண்டத்தில் இருக்கும்" என்பது மெய்யோர்களின் கூற்று.

நமக்கு இதை வள்ளலார் கழுத்திற்கு மேலே அண்டம் கழுத்திற்கு கீழே பிண்டம் என்று குறிப்பு கொடுத்து உதவுகிறார். இவ் அண்டம் மிகவும் பிரம்மாண்டமானது அதன் துவக்கம் தோன்றம் அதன் முடிவு எவராலும் அறியமுடியாத ஒன்றாக உள்ளது. 
இதை ஞானிகள் தம் அனுபவத்தில் இறைவனது வடிவமாக இப் பேரண்டத்தை  உணர்ந்தார்கள். மேலும் இவ் அண்டத்தில் உள்ள ஒவ்வொரு சிறு துகளும் இவ் அண்டத்தின் தன்மையும் வடிவமும் கொண்டது என உரைத்தார்கள். ஆனால் தத்துவ ஞானிகளும் விஞானிகளும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழு ஆழ்ந்து ஆராயும் பொது இதன் தன்மையை ஒருவாறு உணர ஆரம்பித்துள்ளனர்.

முதலில் இது தொடர்பான ஓர் கணித அமைப்பை பார்ப்போம் 

பிராக்டல் ( fractal ) என அழைக்கப்படும் ஒரு சமன்பாடு , இது மிகவும் ஆச்சர்யமூட்டும் கணித சமன்பாடு அணைத்து இயைக்கை செயல்பாட்டிலும் இது இருப்பதை உணர்த்துகின்றன . இது அடிப்படையில் இயற்க்கை தனது வடிவத்தை அந்த பொருளின் சிறு பின்ன வடிவிலான வடிவத்திலும் பொருத்தி அது நாம் எவ்வளவு சிறியதாக பின்ன படுத்தினாலும் அந்த பொருளின் வடிவம் அந்த சிறிய பின்ன பகுதியில் இருப்பதை விளக்குகின்றது 




இதை அவர்கள் விளக்கும் சமன்பாட்டில் உள்ள சில பகுதிகளை மட்டும் எடுத்துக்கொள்வோம் 

சமன்பாட்டில் தொகை ( டிவிடெண்ட் ) அந்த தொகை அதனுடன் சேர்ந்த ஒரு மாறிலி ( கான்ஸ்டெண்ட் ) கொண்டதாகவும் இது பெரிய உருவத்தை பின்னப்படுத்தி சிறிதாக பார்க்கவும் பயனுள்ளதாக உள்ளது. 
இவ்வாறு உருவாக்கப்படும் பின்ன அமைப்பானது எப்பொழுதும் தனது முழுமையான வடிவத்தை தனது சிறு பகுதிகளான பின்னத்திலும் சிதறாமல் தக்கவைத்துக்கொள்கிறது.

சரி நாம் இப்பொழுது ஆச்சரியத்திற்கு வருவோம். இந்த கணித தேற்றம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நமக்கு வழங்கப்பட்டது என்றால் ஆச்சர்யம் தானே ! ஆம் , cosmology பற்றி மாணிக்கவாசகர் அருளிய ஒரு பாடல் 

திருவண்டப்பகுதி 
இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன் தெரியின்,
'வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும் - திருவாசகம்

இதை நன்கு கவனியுங்கள் , 
சிரியவாக பெரியோன் தெரியின் ,  பெரியவற்றை சிரியனவாக காட்டும் அல்லது வகுக்கும் ( பின்னப்படுத்தும் ) 
வேதியன் தொகையோடு - தொகை என்பது தொகுப்பு அல்லது கூட்டம் , வகுத்தல் பகுதியில் வகுக்கப்படும் எண்ணிற்கு தொகை என்றும் பெயர். 
மாலவன் மிகுதியும் - மிகுதி என்பது வகுத்தல் போக மீறுவது அது மாலவன் அதாவது மாறாத தன்மை உடையது ( கான்ஸ்டன்ட் )
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய - இதில் வரும் தொகுதிகள் , தான் ஒன்றுக்கு ஒன்று சிறப்பு உடையதாக , 
ஈற்றொடு புணரிய - இதன் ஈற்று ( கடைசி ) எடுத்து நாம் பார்க்கும் பொது தன் முழுவடிவமும் மீண்டும் எடுக்கும் தன்மை 


இவாறாக இறைவனின் வடிவம் உள்ளது என அற்புதமாக அண்டவியலை விளக்கும் பாடல் இது, எத்துணை முறை கூறினாலும் கேட்டாலும் படித்தாலும் இனிக்கும் தித்திக்கும் அவன் வடிவம் .. உணர்ந்து பார்ப்போமாக 


Comments