காலமும் நானும்



காலமும் நானும் 
நானோ இயற்க்கை என்றேன் 
                                அவனோ மதிப்பு கூட்ட எந்திரம் தேவை என்றான் 
நானோ மூடாக்கு என்றேன் 
                                அவனோ  தண்ணீர் அவசியம் என்றான் 
நானோ பல்லுயிர் பெருக்க வேண்டும் என்றேன் 
                                அவனோ தேர்த மரங்கள் நல்ல விளைத்தரும் என்றான் 
நானோ அன்பு என்றேன் 
                                அவனோ நாய்களுக்கு மட்டும் பிஸ்கெட் வாங்கினால் போதும் என்றான் 
நானோ அன்புகொண்டு பாருங்கள் என்றேன் 
                                அவனோ அதுவும் ஒரு வியாபார யுக்தியா என்றான் 
சினமே கொண்டேன் அவனை சிதைக்க துணிந்தேன் 
மறுகணம் என்னுள் ஆழ்த்தேன் காலனுக்கு கருணை புகட்டும் உபாயம் தேடி 
காட்சி தவிர்த்தேன் கரணம் தவிர்த்தேன் மௌனம் பிறந்தது 
மேலும் ஆழ்தேன் குருவருளால் மோனம் பெற்றேன் 
காலம் பதைத்தான் , தான் அற்றுப்போவதை உணர்ந்தான் 
என் நினைவுகளுக்காக காத்திருந்தான் , மோனம் தோய்த்து 
கண்கள் வெள்ளமென கசிந்தன முதல்முறை என்னுள் மனிதம் மலர்ந்தது 
காட்சி தெளிந்தது காத்திருந்த காலம் பக்கம் என் கருணை பார்வை ஊடுருவ 
அசைவற்று அவனை அது எதோ செய்ய தவழ்ந்து வந்தான் என் மடியில் குழந்தையாக 
என் செய்ய என்றான் பெற்ற அன்பே எல்லாம் என்றேன் 
களிப்புற கதைகள் பேசி தன்  தானாகி தனித்து நின்றோம் 
பின்பு நானோ அன்பை விதை என்றேன் 
                                அவனோ ஆம் ஆனந்தமே அறுவடை என்றான் 
மறுமுறை நானோ மூடாக்கு என்றேன் 
                                அவனோ ஆம் உயிருக்கு அவசியம் என்றான் 
நானோ இதில் மதிப்பு கூட்ட? என்றேன் 
                                அவனோ பொருளின் ஒழுக்கமே உயர்வு என்றான் 
நானோ பூச்சி வந்தால் ? என்றேன் 
                                அவனோ ஆகா நாம் அன்பு செலுத்த அற்புத வாய்ப்பு என்றான் 
தடை என நினைத்த காலம் இப்போது தாய் போல என்னை பார்த்துக்கொண்டான்  
தான் கரைத்தேன் அன்பின் துணையாள் ....அந்தோ என்சொல்வேன் என் குருவருள் பெருமை தானே !!


"வெளியில் விதைத்து எடுக்க அன்பு ஒன்றும் விதைபொருளல்ல , உன்னுள்ளே விதைத்ததும் காலமெல்லாம் இருப்பதை மற்றவர்க்கு கொடுக்க தூண்டும் அருட் பொருள்.. "

Comments

varunsivapithan said…
அன்பு ஒன்றே அவன் வழி செல்ல வழி....
Emptiness said…
தங்கள் அன்பிற்கு நன்றி !