யோகிகளும், ஞானிகளையும் எவ்வாறு அடையாளம் காண்பது ? - வள்ளலார்


யோகிகள்
பசியால் வருந்துகின்ற சீவரக்ளுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் காரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.

ஞானி

அவ் ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது , அவர் உண்ணுவது தாமுண்ணுவதாக  அறிந்து களிக்கின்ற  படியால் , அந்தப் புண்ணியர்களை ஞானிகளென்றே  உண்மையாக அறியவேண்டும்.

முக்தர்  
ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்து தேகமுழுதும் சிலென்று தழைய முகத்தினிடமாக பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பதையும் பிரத்தியட்சத்தில்  தரிசித்து அனுபவிக்கிறார்கள் ஆதலால் , அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரெண்டும் அறிய வேண்டும்.

தெய்வம் 
பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாக பாவிக்கிறார்கள் , ஆதலால் இவர்களே தெய்வமென்று உண்மையாக அறியவேண்டும்


Comments