மனோ ஜாலம் கடக்கும் வழி


முருகன் அருள் -மனோஜாலம் கடக்கும் வழி




அண்மையில் இந்த அற்புத மந்திரம் பற்றி விளக்கும் வாய்ப்பு கிடைத்தது. இம் முருக மந்திரம் ரவிவர்மா ஓவிய சுப்ரமணியர் படத்துடன் வெளிவரும் 'முருகன் பூஜா விதி' எனும் ஓர் தொகுப்பில் உள்ள ஒன்று ,ஒவ்வொரு 
அம்சத்திர்க்கும் பூஜை விதி மற்றும் மந்திரதுடன் இனக்கபட்ட ஒரு புத்தகம் ஆகும்.

தொகுப்பில் உள்ளபடி இங்கே

மயில் : தூங்கும் பொழுது நடுக்கம் பயம், பிதற்றல் கெட்ட கனவு முதலியவற்றின் சாந்தியை, விரும்புவோர் 
யூம் நமோ மயூராய சிகிவாஹனாய !!
என்ற மந்திரத்தால் 108 நெல் பொரி களைக் கொண்டு 7 நாள் மௌனியாக இருந்து ஒருவேளை ஆகாரத்துடன் மயிலை அர்ச்சனை செய்து விபூதியை எடுத்து 108 தரம் மேற் பழ மந்திரத்தால் ஜெபித்து தே கத் தில் பூசிக்கொள்ளவும். நெல் பொரியை உட்கொள்ளவும் வேண்டும் நலம் உண்டாகும்.

விளக்கம்

மயில் மனோமயதிக்கு ஒப்புமை கூறப்படும் ஒரு அம்சம். மிகவும் நுட்பமான  மந்திர  பௌத்த நுட்ப மந்திரதிலும் குறிப்பிட பட்டுள்ளது.
அங்குசம் நிலை பார்த்தது போல மயில் வடிவம் அம்சம் வைத்து பல நுட்ப பயிற்சிகள் உண்டு. 


1 வடிவம்
மயிலின் வடிவம் பிரணவதிர்க்கு ஒப்பிட படுகின்றது.
"ஏறு மயில் ஏறி " வியோம வட்ட ரகசியம் ஆகும்

2. சப்தம்

மயில் வெளியிடும் சத்தம் அகவுதல் எனப்படும் . தொல்காப்பியர் இலக்கணம் நன்கு வகை ஓசைகளை குறிப்பிடுகின்றது
அதில் அகவல் ஓசை எழுத்தளவு மிகாமல் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஒசை. 

அசைவு

மேலும் ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.
இவ்வாறு ஒலிக்கப்படும் அலைவடிவம் மனம் மற்றும் அதை 
கடந்து செல்ல பயன்படும் .
இந்த அசைவு க்கும் அன்னாக்கு உண்ணக்கு பகுதிக்கும் அதிக தொடர்பு உண்டு.

மந்திர பிரயோகம்

யூம் என்ற பீஜம் மிகவும் அற்புத 
யகர உகர(நெடில்) மகர தொகுப்பு
 இந்த பீஜமாக அமைத்துள்ளது.

 சில நேரங்களில் நாம் வானில் பறப்பது போன்ற தோற்றம் அல்லது கனவு கண்டால் அது நம் மநோமய கோசத்தின் வெளிப்பாடு.

சொப்பன , ஜாக்ரத , சுஷுப்தி, துரியம்
என்ற நான்கு நிலைகளை கடந்த நிலக்கு எடுத்து செல்லும் தன்மை கொண்டது இந்த பீஜ மந்திரம்.

... தொடரும்

Comments